அக்னிப்புரட்சி இன்றைய (01.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,05,77,756ஆக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,90,762ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,186ஆக உயர்வு.
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 27,27,853ஆக உயர்வு
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,122ஆக உயர்வு
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840லிருந்து 5,85,493ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822லிருந்து 3,47,979ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,893லிருந்து 17,400ஆக உயர்வு- மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 3882 பேருக்கு கொரானா பாதிப்பு. தமிழகத்தில் இதுவரை 94,049 பேர் கொரானோவால் பாதிப்பு.
சென்னையில் மட்டும் 2182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரானாவுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இதுவரை கொரானாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1264.
தமிழகத்தில் இன்று 2,852 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,926-ஆக அதிகரித்துள்ளது.
*தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தவர்கள் மாவட்டவாரியாக..
சென்னை - 41
மதுரை - 7
திருவள்ளூர் - 5
செங்கல்பட்டு. - 2
ராமநாதபுரம். - 2
காஞ்சிபுரம் - 2
கரூர் - 1
விருதுநகர் - 1
தேனி. - 1
புதுக்கோட்டை - 1
இன்றைய உயிரிழப்பு - 63
*சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வெளியீடு:
சென்னையின் 4 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக அண்ணாநகரில் 3,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோடம்பாக்கம்- 2322, ராயபுரம்- 2309, தேனாம்பேட்டை- 2051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தண்டையார்பேட்டை- 1838, அடையாறு- 1594, திரு.வி.க.நகர் -1771 பேர் சிகிச்கையில் உள்ளனர்.
வளசரவாக்கம் - 1175, அம்பத்தூர்- 1020, மாதவரம்- 899, ஆலந்தூர்- 800 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
*சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.மருந்து, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது -தமிழக அரசுத் தரப்பில் மதுரைக் கிளையில் தகவல்.
*மதுரையில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மொத்த பாதிப்பு 2,858 ஆக உயர்ந்தது..
கொரோனா தொற்றால் மதுரையில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழப்பு
🟣கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு.
*சாத்தான்குளத்திற்கு புதிய டிஎஸ்பி நியமனம். கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக உள்ள என்.ராமநாதன், சாத்தான்குளம் டிஎஸ்பியாக நியமனம்.
*தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அம்மா உணவகங் களில் விலையில்லா உணவு
நாளை முதல் ஜூலை 5ம் தேதி வரை வழங்கும் நடைமுறை அமலில் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
*நாடு முழுவதும் இன்று முதல் 6ஆம் கட்ட ஊரடங்கு அமல். 6-ஆம் கட்ட ஊரடங்கு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட் டுள்ளது. 6ஆம் கட்ட ஊரடங்கில் கிராம பகுதி சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க ஜூலை 6 முதல் அனுமதி.
*சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
கோவில்பட்டி கிளைச் சிறை ஆவணங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து, சிபிசிஐடி நடவடிக்கை. அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது மர்ம மரணம் என சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.
*பேருந்து சேவைகள் நிறுத்தம்.
இன்று முதல் 15 ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம். அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.
*வேலூரில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:
வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1553 ஆக உயர்வு.
383 பேர் குணமடைந்துள்ளனர், 12 பேர் உயிரிழப்பு.
*கொரோனா - காவல் துறையில் மேலும் ஒரு பலி: சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி.
சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் பலி.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.
தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழப்பு.
ஏற்கனவே சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு.
*75 கோடியில் ஆக்சிஜன் வசதி:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 75 கோடியில் ஆக்சிஜன் வசதி.
200 படுக்கைகளுக்கு மேல் உள்ள அரசு மருத்துவமனைகளில், பைப் லைன் மூலம் ஆக்சிஜன் வசதி.
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
சென்னையில் மட்டும் 11 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது.
*சேலம்: சின்னக்கடை வீதியை மூட வியாபாரிகள் எதிர்ப்பு:
வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
*திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் தின வாழ்த்து:
நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை. பிறர் உயிர் வாழ்தலைபற்றி கவலை கொள்பவர்கள் மருத்துவர்கள்.
நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்.
*12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது.
முதல்வரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். - கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்.
*மக்களிடம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயக்குமார் பேட்டி.
*திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை:
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையிலேயே விசாரணை நடத்த முடிவு.
*என்எல்சி விபத்து - 8 பேர் பலி:
கடலூர் நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
என்.எல்.சி.யின் 2-வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து.
*சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது - ரஜினிகாந்த்.
*கடலூர் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து:
உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உறவினர்கள் போராட்டம்.
உடல்களை பார்க்க அனுமதிக்கக் கோரி ஆம்புலன்சை மறித்து போராட்டம்.
11 பேர் கவலைக்கிடம் - விபத்தில் சிக்கிய 2 பேரை தேடும் பணி தீவிரம்.
படுகாயமடைந்த 17 பேரையும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு.
*என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறினேன் - அமித்ஷா.
*மின்கட்டணம் - உயர் நீதிமன்றம் கேள்வி. மின்கட்டணம் செலுத்த ஜூலை 31ஆம் தேதி வரை கால அவகாசம் கோருவது ஏன்?
கால அவகாசம் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி.
தமிழகத்தில் 75 சதவீத பேர் மின் கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் அவகாசம் கோருவது ஏன்?
இதுவரை மின் கட்டணம் செலுத்தப்பட்ட விவரம், அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு.
*சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்:
26 நாள் பணி என அழைத்து வந்து போதிய உணவு, ஓய்வு வழங்காமல் பணிசெய்ய வைப்பதாக குற்றச்சாட்டு.
*சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீட்டிற்கு சென்று அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவியை ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
*சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்வு.
அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அண்ணா நகர் மண்டலத்தில் 39 தெருக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.
*பதஞ்சலியின் மருந்து மூலம் 7 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைகின்றனர். மருத்துவ சோதனை தொடர்பான ஆவணங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைப்பு. பதஞ்சலியின் மருந்து மூலம் 3 நாட்களில் 67 சதவீதம் நோய் பாதிப்பு குணமடைகிறது எனவும் விளக்கம்.
ஹரித்துவாரில் செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் உள்ளிட்ட பதஞ்சலி நிர்வாகிகள் தகவல்.
கொரோனா மருந்தை விளம்பரம் செய்ததாக பதஞ்சலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
*ஆடுகளுக்கு கொரோனா?
கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் வளர்த்து வரும் சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் சுமார் 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன!
*சென்னை: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஜூலை 5 -ம் தேதி வரை அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும். முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோர்களின் இல்லங்களுக்கே சென்று உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
*நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அனல்மின் நிலைய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் லேசான காயமடைந்தவர்
களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.-முதல்வர் எடப்பாடி பழனிசாமி
*மதுரை மாவட்டத்தில் இதுவரை 142 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. மதுரை மாநகரில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 115 பேருக்கு நோய்த் தொற்று
*ராமநாதபுரம் அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் காவலர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
*சென்னை அமைந்தகரை குற்றப்பிரிவு பெண் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு கொரோனா
சென்னை அமைந்தகரை குற்றப்பிரிவு பெண் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த 3 பேரும் ஐஐடி வளாகத்தில் உள்ள முகாமில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*சேலம் மாவட்டம் மேட்டூர் பண்ணவாடியில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*கன்னியாகுமரியில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகள் வரும் 15-ம் தேதி வரை ரத்து: ஆட்சியர்
கன்னியாகுமரியில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகள் வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார்.
கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவித்துள்ளார்.
*இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம்: நிதின் கட்கரி திட்டவட்டம்
இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதை அனுமதிக்க மாட்டோம் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கூட்டுத்திட்டமாக இருந்தாலும் நெடுஞ்சாலை பணிகளில் அனுமதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
*என்.எல்.சி. 2 வது அனல்மின் நிலைய முதன்மைபொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட்.
நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை.
பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் - என்.எல்.சி. நிர்வாகம்.
*கோவையில் ஊரடங்கு காரணமாக வாழை இலையின் தேவை குறைந்து போனதால், தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படாமல் இருக்கும் வாழை தோட்டங்களை விவசாயிகள் தீ வைத்து எரித்து அழித்து வருகின்றனர்
*கேரளாவில் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,593ஆக உயர்வு. கேரளாவில் தற்போது 2,132 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் - கேரளா முதல்வர் பினராயி விஜயன்
*நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறை பங்கெடுக்க ரயில்வே அமைச்சகம் அழைப்பு. பயணிகள் ரயில் சேவையில் தனியார் நிறுவனம் பங்கு பெற அழைப்பு விடுப்பது இதுவே முதல் முறை
*இந்த மாதம் (ஜுலை) அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு
*அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டிலிருந்து பிரியங்கா காந்தி வெளியேற உத்தரவு
*வீட்டிலிருந்தே வாட்ஸ்-அப் செயலி வீடியோ அழைப்பு மூலம் புகார் தெரிவிக்கும் முறையை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் இன்று அறிமுகப்படுத் தினார்கள்.
No comments:
Post a Comment