இன்றைய (02.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,417ஆக உயர்வு.
கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59,30,148ஆக உயர்வு.
கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046ஆக உயர்வு.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,85,493-லிருந்து 6,04,641-ஆக உயர்வு
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,47,979-லிருந்து 3,59,860-ஆக உயர்வு
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,400-லிருந்து 17,834-ஆக உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு கொரோனா தொற்று; 434 பேர் உயிரிழப்பு
- மத்திய சுகாதார அமைச்சகம்
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 62,560 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 57 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,075 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்.
*தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75,000 படுக்கை வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 12,39,692 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
*இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும்.
தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
*காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு.
விடிய விடிய போலீசார் அடித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் ரேவதி சாட்சியம் அளித்தார்.
காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம் - நீதிபதிகள். ரேவதியின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே உண்மை வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
*சாத்தான்குளம் மரண வழக்கில் கைதானவர்கள் மீது உள்நோக்குடன் மரணத்தை விளைவித்தல் (IPC 301) பிரிவின் கீழும் வழக்குப்பதிவு. கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
*சாத்தான்குளம் இருவர் மரண வழக்கில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யபட்ட 4 பேரும் கைது(தலைமறைவான பாலகிருஷ்ணனுனம் கைது)
சொந்த ஊர் சென்று கொண்டிருந்த ஆய்வாளர் ஸ்ரீதரும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
*கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டார்!
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் 1- ஆய்வாளர், 2-உதவி ஆய்வாளர் 2- காவலர்கள் என மொத்தம் 5 பேர் கைது.
*கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம்.
விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம். இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்-கமல்ஹாசன்.
*நெடுஞ்சாலை பணிகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை: கூட்டுத் திட்டமாக இருந்தாலும் நெடுஞ்சாலை பணிகளில் அனுமதியில்லை. - நிதின் கட்கரி, மத்திய அமைச்சர்.
*தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு- அமைச்சர் சி.வி.சண்முகம்.
ஒரு தந்தையை, ஒரு சகோதரனை, ஒரு கணவனை, ஒரு மகனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலியை உணர்கிறோம்.
உயிர்களையும், உறவுகளையும் இழந்துவாடுபவர்கள் நிலைநாட்ட விரும்புகிற நீதியை அரசு நிச்சயம் உரித்தாக்கும்- அமைச்சர் சி.வி.சண்முகம்.
*ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போலியான சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த காவலர் மீது வழக்குப்பதிவு: காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் காவலர் முருகன் மீது வழக்குப்பதிவு.
*முழு ஊரடங்கு அமலாகும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.
ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிப்பு.
*பாகிஸ்தானில் உயர்வு
இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மேலும், 4,133 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தொற்று ஏற்பட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.13 லட்சத்தை தாண்டியது. கடந்த, 24 மணி நேரத்தில், 91 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 4,395 ஆக உயர்ந்தது
*.ஐ.நா., வீரர்களுக்கு அஞ்சலி
நியூயார்க்: ஐ.நா., சபை சார்பில், அமைதிப் படை பணியில் இருந்தபோது உயிரிழந்த, 41 நாடுகளைச் சேர்ந்த, 77 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், இந்தியாவைச் சேர்ந்த, ஐந்து வீரர்களும் அடங்குவர். கடந்தாண்டு, மார்ச் முதல், டிசம்பர் வரை உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் பங்கேற்றார்.
*படகு விபத்தில், 60 பேர் பலி?
அங்காரா: மேற்காசிய நாடான துருக்கியில் உள்ள, ஒரு ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 60 அகதிகள் இறந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. கடந்த வாரம் நடந்த இந்த விபத்தில் சிக்கிய வர்களில், ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்தப் படகில் பயணித்தவர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த அகதிகள் என்பது தெரியவந்துஉள்ளது.
*சீனாவை விசாரிக்க வலியுறுத்தல்
சீனாவில் சிறுபான்மையினரான, உய்கர் முஸ்லிம்கள் மக்கள் தொகையை குறைக்கும் வகையில், அந்த மதத்தின் பெண்களுக்கு, கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், வட அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் இணைந்த குழு, 'சீனாவின் இந்த கொடூர நடவடிக்கை குறித்து, ஐ.நா., விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளது.
*ஓட்டெடுப்பு முடிவு ரஷ்யாவின் அதிபராக, விளாடிமிர் புடின், 2036ம் ஆண்டு வரை நீடிக்கும் வகையில், அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஓட்டெடுப்பில், மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கடைசி நாளான நேற்றுடன் ஓட்டெடுப்பு முடிந்தது.
*இந்தியருக்கு விருது
நியூயார்க்: காமன்வெல்த் அமைப்பு வழங்கும் மிகச் சிறந்த சிறுகதைக்கான விருதை, அமெரிக்காவில் படித்து வரும், இந்திய மாணவி கிருத்திகா பாண்டே, 29, வென்றுஉள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவின் மசாசூசெட்சில் படித்து வருகிறார். ஏற்கனவே, பல்வேறு சர்வதேச விருதுகளை இவர் வென்றுள்ளார்.
*காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது-உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல். போலீசாரின் மன அழுத்தத்தால் சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்றதாக கருதப்படுகிறது.
*சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த தலைமைக்காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. - ஐஜி முருகன்.
*பல மணிநேரமாக நீடிக்கும் விசாரணை சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர், எஸ்.ஐ.உள்ளிட்டோரிடம் பல மணிநேரமாக நீடிக்கும் விசாரணை:
நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன்,
காவலர்களிடம் அதிகாலை முதல் விசாரணை.
*மகாராஷ்டிர சிறைச்சாலைகளில் இதுவரை 363 கைதிகளுக்கும், 102 சிறைக் காவலர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 4 கைதிகள் கொரோனாவால் உயிரிழப்பு:
அதிகபட்சமாக மும்பை மத்திய சிறையில் 181 கைதிகளும், 44 காவலர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். - மகாராஷ்டிர சிறைத்துறை.
*சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார். புதிய ஆணையரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்.
*சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை: சிபிசிஐடி போலீசார் நீதியை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு.
*தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயர்நீதிமன்ற கிளை கண்காணிக்க வேண்டும். - ஜெயராஜ், மகள் பெர்சி.
*பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி. அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா.
*ஆபரணத் தங்கததின் விலை சவரனுக்கு இன்று 408 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று 1 கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 684 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 51 ரூபாய் சரிந்து 4 ஆயிரத்து 633 ரூபாயாக உள்ளது.
இதேபோல் நேற்று 37 ஆயிரத்து 472 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 408 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 64 ரூபாயாக உள்ளது.
*கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் மொத்தம் 8 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதி. ஒருவர் மரணம்
*திமுக
ஜெ. அன்பழகன் - சேப்பாக்கம் (இறந்துவிட்டார்)
வசந்தம் கார்த்திகேயன் - ரிஷிவந்தியம்
ஆர்.டி.அரசு - செய்யாறு
மஸ்தான் - செஞ்சி
*அதிமுக
கே.பி.அன்பழகன் - பாலக்கோடு (அமைச்சர்)
சதன் பிரபாகர் - பரமகுடி
குமரகுரு - உளுந்தூர்பேட்டை
பழனி - ஸ்ரீபெரும்புதூர்
*'என்.எல்.சி விபத்து - நாளை கடையடைப்பு'. என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு.
நெய்வேலியில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.
*துத்துக்குடியில் விஷ வாயு தாக்கி 4 பேர் பலி
துத்துக்குடி செக்கார்குடியில் விஷ வாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழப்பு
தொட்டியில் கழிவுகளை அகற்றியப் போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்
*இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை- இண்டிகோ அறிவிப்பு. கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இண்டிகோ கட்டண சலுகை வழங்குகிறது.
*தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.
5 முன்னணி மின்னணு வணிக நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம். தமிழகத்தில் நிலவும் சாதகமான தொழிற்சூழல் மற்றும் ஊக்கச்சலுகைகளை கடிதத்தில் விளக்கியுள்ளார்.
*என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரம்: முதலமைச்சருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு.
மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை.
*2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து:
யு.ஜி.சி. அனுமதி தராததால் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு. கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிப்பு.
*என்எல்சி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு. விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் . - என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு.
*வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஜூலை 6-ஆம் தேதி முதல் திறப்பு:
முழு பாதுகாப்புடன் திறக்கப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தகவல்.
*இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3000 நிதியுதவி. 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*அறந்தாங்கியில் சிறுமி வன்கொடுமை - முதல்வர் எச்சரிக்கை:
அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் இரங்கல்.
கொடூர சம்பவம் நெஞ்சை பதறச்செய்கிறது. சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.
*புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்:
சிறுமியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு.
*பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் : சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேட்டி
சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறிவது கடினமாக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
*நாளை லடாக் செல்கிறார் ராஜ்நாத் சிங்!! இந்திய சீன கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!
இந்நிலையில் கிழக்கு லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை(நாளை) செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
*🪀கொரோனா காரணமாக 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
*ரஷ்யாவிடமிருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
12 சுகோய் - 30, 21 மிக் - 29 போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
*தமிழகத்தில் 1.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு இலவச அரசி அறிவித்துள்ளது
மத்திய அரசு அறிவித்த இலவச அரிசியை தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் - அமைச்சர் காமராஜ்
*🪀21ஆம் நூற்றாண்டின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் உலகின் 2வது வீரராக ரவீந்திர ஜடேஜா தேர்வு!
முதலிடத்தில் முத்தையா முரளிதரன்.
*வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த டிராபிக் ராமசாமி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை ராமசாமி மனு அனுப்பி இருந்தார்
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்திய போதும், மீண்டும் அவசர சட்டத்தை எதிர்த்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன் முறையான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்
*மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை
2 செ.மீ அளவிலான குண்டு யானையின் காதுக்கு மேல் புறத்தில் துளைத்து மூளையில் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
வனத்துறையினர் இருவரை பிடித்து விசாரணை
*வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது?
நேர்மறையான தீர்வை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் விமானங்கள் இயக்க அனுமதி கோரிய வழக்குகள் திங்கட் கிழமைக்கு ஒத்திவைப்பு
*பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங் களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும் AICTE உத்தரவிட்டுள்ளது
*மதுரையில் இன்று ஒரே நாளில் 259 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,117ஆக அதிகரிப்பு.
*கொரோனா வார்டில் இருந்து தொடர்பு கொள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாக்கி-டாக்கி வசதி மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் வாக்கி-டாக்கி வசதி
*நடப்பு கல்வியாண்டுக்கான மொத்த கல்வி கட்டணத்தில் 70% தொகையை மூன்று தவனைகளில் வசூலித்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
*நீட் மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும்
தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவு
தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள், நிபுணர்குழுக்களிடம் பரிந்துரை கேட்கப்பட்டுள்ளது.
*செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய காவல்துறை DIG யாக. சாமுண்டீஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார் இவர் இதற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து தற்போது பதவி உயர்வு பெற்று டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார்
*மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162ஆக அதிகரிப்பு..!
பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
No comments:
Post a Comment