அக்னிப்புரட்சி இன்றைய (06.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.07.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414ஆக உயர்வு.

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆக உயர்வு.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,73,165லிருந்து 6,97,413ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,083லிருந்து 4,24,433ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,268லிருந்து 19,693ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*டெல்லியில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் புதிதாக 1,379 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

குணமடைந்தோர் 749 பேர்
உயிரிழந்தோர் 48 பேர் இவர்களோடு சேர்ந்து 3,115 பேர் பலி
மொத்தம் 1,00,823 பேர் பாதிப்பு
72,088 பேர் குணமடைந்தனர்
25,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் ஒரே நாளில் 3827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்வு

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,017 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 61 பேர் உயிரிழப்பு

வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்தது

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3793 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டனர்

தமிழகத்தில் மொத்தம் 66,571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்

மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 213 பேருக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரத்தில் மேலும் 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥
மாவட்டவாரியாக இன்று கொரோனா உயிரிழப்புகள்

சென்னை- 30
செங்கல்பட்டு- 8
மதுரை- 7
திருவள்ளூர்- 5
காஞ்சிபுரம் - 3
திருவண்ணாமலை - 3
தூத்துக்குடி - 1
விருதுநகர் - 1
திருச்சி - 1
ராமநாதபுரம் - 1
விழுப்புரம் - 1

இன்று உயிரிழப்பு - 61 | மொத்த உயிரிழப்புகள் - 1,571.

*மின்கசிவு காரணமாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிபத்து. நோயாளிகள் உடனடியாக வெளியேற்றம்.

*கொரோனா பாதித்த சென்னை ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

*புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது.
இன்று ஒரேநாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,011-ஆக உயர்வு.

*கோவையில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு என  புகார்: 4 தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி ரத்து-சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை.

*மூன்றாண்டு எம்சிஏ படிப்பு,  2 ஆண்டு படிப்பாக மாற்றம்.
பல்கலைக்கழக மானியக் குழு  பரிந்துரையை ஏற்று ஏஐசிடிஇ அறிவிப்பு. நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

*சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் டாக்சி,  ஆட்டோக்கள் இயக்கப்படும். சென்னையில்  இறைச்சி, மீன் கடைகளும் இன்று முதல் திறக்கப்படும்.

வர்த்தக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்களுக்காக மட்டும் திறக்கப்படும்.

*11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து:
பழையபடி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு. பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை. பாட திட்டங்கள் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

*பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தகவல்.

*அரசு அலுவலகங்களில் 33%க்கு பதில் 50% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு அனுமதி.

மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பெண் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு. பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணையில் விளக்கம்.

*லடாக் எல்லையில் சீன படைகள் பின் வாங்கின.
சுமார் 2 கி.மீ. அளவிற்கு சீன படைகள் பின் வாங்கியதாக தகவல்.
ராணுவ கமாண்டர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிரொலி.

*சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகள் ஒரே நாளில் DELETE ஆகும் வகையில் செட் செய்யப்பட்டிருப்பதாக சொன்னதில் புதிய திருப்பம்.

சிசிடிவி காட்சிகளின் அமைப்புகளை தங்களால் மாற்ற இயலாது என காவலர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்.

சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல் நிலைய கணினி பொறுப்பில் இருந்த காவலர், மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் என தகவல் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா?...தானாக அழிந்ததா?... பதிவுகளை மீட்கும் பணி தீவிரம்.

*சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கிய வழக்கு. ஆய்வாளர் சத்திய பிரபா, உதவி ஆய்வாளர் அன்னலட்சுமி, காவலர்கள் 4 பேர் மீது வழக்குபதிய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. டிஎஸ்பி விசாரணை செய்யவும் மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

*தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் ஜூலை 20ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

*தமிழக அரசு அறிவிப்பு:
நவம்பர் மாதம் வரை அனைத்து அரிசி அட்டைத்தாரர்களுக்கும் (ரேசன் கார்டுதாரர்களுக்கு) விலையில்லாமல் அரிசி. ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அளவின் படி நவம்பர் மாதம் வரை விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு.

*தென்காசி : சிவகிரி காவல்நிலையத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று - காவல்நிலையம் மூடல்.

*'சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை.

*பான்-ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு:
கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மேலும் அவகாசம் வழங்கியது மத்திய அரசு.

*ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சர்வதேச எல்லைகளை திறக்க கென்யா முடிவு:
மே மாதம் முதல் கென்யாவின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

*என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12ஆக உயர்வு:

நேற்று மாலை முதல் தற்போது வரை மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 17 பேரில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

*கொரோனா பாதித்த பெண் மருத்துவர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் கொரோனா பாதித்த 62 வயது பெண் மருத்துவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு.

*10 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை. சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை.

மதுரை, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு. காணொலி காட்சி மூலம்  தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

*கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக திண்டுக்கல்லில் நாளைமுதல் ஜூலை 16ஆம் தேதி வரை நகைக்கடைகள் இயங்காது. - நகை வியாபாரிகள் சங்கம்.

*கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திருமதி.பா.வளர்மதி அவர்கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் அவர்களும் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை இறைவனை வேண்டிக் கொள்கிறேன் -
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

*பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலை தொடா்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீசார் ஒரே நேரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜா்.

*திருச்சி அதவத்தூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி எரிப்பு?
வீட்டருகே குப்பை கொட்ட சென்றவர், உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி. சம்பவ இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா விசாரணை.

*பல்கலைக்கழக இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி.

மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம். யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் உத்தரவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages