நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!
கொரோனா தொற்றில் இருந்து காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
*காலை ஒரு வேளை கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்வது,
*அவ்வப்போது சூடான தண்ணீர் குடிப்பது,
*உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மாலை இரு வேளையும் வாய் கொப்பளிப்பது,
*துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீராவி பிடிப்பது,
*மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இரு வேளையும் பருகுதல் உள்ளிட்டவையால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*இது மட்டுமின்றி மூலிகை டீ, மற்றும் வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.
*அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்.
*தினமும் 15 முதல் 20 நிமிடம் காலை 7.30 மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரியக் குளியல் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும். என சென்னை மாநகராட்சி!தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment