அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.07.2020) முக்கிய செய்திகள்.

*உலகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,15,367 ஆக அதிகரிப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை 73,20,988 ஆக உயர்வு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,62,011 ஆக அதிகரிப்பு

மேலும் 58,803 பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,93,802லிருந்து 8,20,916ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513லிருந்து 5,15,386ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604லிருந்து 22,123ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு - 3,965 பேர் இவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை -1,34,226 பேர்

சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 1185 பேர் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை -76,158 பேர்

இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை - 69 பேர் பலியானார்கள் எண்ணிக்கை -1,898 பேர்

தமிழகத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை - 3591 பேர்

*கேரள தங்க கடத்தல் விவகாரத்தை NIA விசாரிப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு:

மத்திய அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது.
என்ஐஏ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது, கடந்தகால தங்கக் கடத்தல் வழக்குகளையும் அவர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன். - கேரளா முதல்வர் பினராயி விஜயன்.

*சிங்கப்பூரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக்ஷன் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

*அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு
மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்.

10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்க- தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு.

ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் - தலைமைச் செயலாளர்.

சமூக விலகலை பின்பற்றி வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்.
12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தல்.

ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக
மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு.

மென்பொருள் பதிவேற்றத்திற்கு ஒரே நேரத்தில் அதிக மாணவர்களை வரவழைக்க வேண்டாம் என அறிவுறுத்தல்.

*மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்ட ஆவணங்கள் விவரம் வெளியானது.

ஜெயராஜ், பென்னிக்சின் 3 கைலிகள், உள்ளாடை உள்ளிட்டவை ஆவணங்களாக ஒப்படைப்பு.
காவல் நிலையத்தில் இருந்த லத்தி, பிவிசி பைப் உள்ளிட்டவையும் ஆவணங்களாக தாக்கல்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்குவதற்காக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில்​ ஒப்படைப்பு,
பிஸ்கட் பாக்கெட், பிரட் பாக்கெட் ஆகியவையும் ஆவணங்களாக வழங்கப்பட்டுள்ளன.

*தமிழகத்தில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு விலக்கு தந்தால் நீதிமன்ற வழக்கை சந்திக்க நேரிடும். சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு தடை இருக்கும் நிலையில் எப்படி விலக்களிக்க முடியும்?- அமைச்சர் ஜெயக்குமார்.

*கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.

செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.

பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க கோரிக்கை.

பெருந்தொற்று காரணத்தால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் நேரிடும் - முதலமைச்சர்.

செப்டம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் உள்ளது - முதலமைச்சர்.

*கடலூர்: தேவனாம்பட்டினத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி வெள்ளிக் கடற்கரையில் குடும்பத்துடன் மீனவர்கள் போராட்டம். சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, நாகை மற்றும் சீர்காழியில்  மீனவர்கள் போராட்டம்.

*உரத்தை விற்பனை செய்யும்போது விவசாயிகளிடம் க்யூஆர் கோட், யூபிஐ ஸ்டிக்கரை கடைகளில் ஒட்டி வைத்து தொகை பெற உத்தரவு. உர விற்பனை நிலையங்களுக்கு திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் உத்தரவு.

*அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - போலீசார் மீது போராட்டக்காரர்கள் பயங்கர தாக்குதல்

செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில், அதிபருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த சில நாட்களாக, அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்ற போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

*ராஜ்நாத்சிங் அமெரிக்க ராணுவ அமைச்சருடன் பேச்சு - பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்ததாக தகவல்

சீன எல்லை பிரச்னை குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் உடன் உரையாடினார். தொலைபேசி வாயிலாக நடந்த உரையாடலில், இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், தொடர்ந்து சீனாவுடனான தற்போதைய சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

*நிலச்சரிவில் சிக்கி 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.அங்கு பெய்து வரும் தொடர் மழையால், பாபம் பரே மாவட்டத்தின் டிக்டோ கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.இதை தொடர்ந்து அருகில் வசித்தவர் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

*அரியலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை களப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று எதிரொலி : 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.

வரும் திங்கள் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் போராட்டம் - போலீஸ் தடியடி
தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பா.ஜ.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார்  தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

*வரும் செவ்வாய்கிழமை (14.07.2020) தமிழக அமைச்சரவை கூட்டம்.
கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை முதலமைச்சர் தலைமையில் ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

*கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல்,  பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

*டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து. இறுதி ஆண்டு தேர்வும் ரத்து என டெல்லி அரசு அறிவிப்பு. கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில் டெல்லி அரசு நடவடிக்கை-டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு.

*கடலூர்: தேவனாம்பட்டினத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி வெள்ளிக் கடற்கரையில் குடும்பத்துடன் மீனவர்கள் போராட்டம்.
சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி, நாகை மற்றும் சீர்காழியில்  மீனவர்கள் போராட்டம்.

*உரத்தை விற்பனை செய்யும்போது விவசாயிகளிடம் க்யூஆர் கோட், யூபிஐ ஸ்டிக்கரை கடைகளில் ஒட்டி வைத்து தொகை பெற உத்தரவு. உர விற்பனை நிலையங்களுக்கு திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் உத்தரவு.

*அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - போலீசார் மீது போராட்டக்காரர்கள் பயங்கர தாக்குதல்

செர்பிய தலைநகர் பெல்கிரேட்டில், அதிபருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த சில நாட்களாக, அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்ற போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

*கும்பகோணம் அரசு மருத்துவமனை செவிலியர் உள்ளிட்ட 24 பேருக்கு கொரோனா வெருவித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

காசிராமன் தெருவில் வசிக்கும் மற்றொருவருக்கும் தொற்று ஏற்பட்டதால், அவர்கள், தஞ்சாவூரில் உள்ள மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

*கேரளாவில் மூன்று மாதங்களில் 66 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது

*சீனாவில் இருந்து ஐ-போன் உற்பத்தியை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவால் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபோக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் உற்பத்தியை குறைத்து தமிழகத்தின் திருபெரும்புதூரில் உள்ள ஃபோக்ஸ்கான் தொழிற்சாலையில் ₹7516 கோடி முதலீடு செய்கிறது...

*நான் குணமடைந்து விட்டேன், வதந்திகளை நம்ப வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்த நிலையில் மியாட் மருத்துவமனை அறிக்கை!

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் - பிரித்வி மோகன்தாஸ் மியாட் மருத்துவமனை!

*சென்னையில் காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. விதிமீறல் இருந்தால் 14 நாள்களுக்கு கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

*தமிழகம் முழுவதும் ஊரடங்கு?
தமிழகத்தில் ஜூலை 31ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த் தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் பெரும்பாலான நகராட்சிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

இது மட்டுமல்லாமல் வணிகர் சங்கங்கள் கடைகளை திறக்கும் நேரத்தை மிகவும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில் சென்னையை தவிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்படாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

*பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை! பெங்களூருவில் 14ந் தேதி முதல் 23ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்!

*கேரளா தங்கக் கடத்தல் வழக்கு -தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கைது. கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது.

*அதிமுக செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா!

அதிமுக செய்தித்தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளருமான கோவை சத்யனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை சத்யன் சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக அனுமதி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages