அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2020) முக்கிய செய்திகள்.

*உலகம் முழுக்க கொரோனா காரணமாக 1,32,28,323 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்

கொரோனா காரணமாக உலகம் முழுக்க 574,962 பேர் பலி

இதுவரை 7,691,015 பேர் உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 34,79,483ஆக உயர்வு
வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,247ஆக உயர்வு

*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254லிருந்து 9,06,752ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,53,471லிருந்து 5,71,460ஆக உயர்வு. 

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174லிருந்து 23,727ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரானா பாதிப்பு. இதுவரை கொரானாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1,47,324 பேர்.

சென்னையில் மட்டும் 1078 பேர் பாதிப்பு.

தமிழகத்தில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 4743 பேர். இவர்களோடு சேர்த்து மொத்தமாக 97,310 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 67 பேர் கொரானாவுக்கு பலி. பலியானவர்களின் எண்ணிக்கை 2,099 பேராக உயர்வு

*பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
தமிழக அரசின் உத்தரவுப்படி, அனைத்து கல்வி அலுவலகங்களிலும் தினசரி 50% ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். சுழற்சி முறை பணி அமலில் இருந்தாலும், தினசரி 50% ஊழியர்கள் கட்டாயம் வர வேண்டும். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை.

*வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்
    
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் - - இந்தியா இடையிலான ஏற்றுமதியை மீண்டும் துவக்க மூடப்பட்ட வாகா எல்லையை நாளை(ஜூலை 15) முதல் திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

'கொரோனா' பரவல் ஏற்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பஞ்சாப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா -- பாக். எல்லையான வாகா பகுதியை பாக். தரப்பு முற்றிலுமாக மூடியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாக். வழியே வாகா எல்லையை கடந்து இந்தியாவுக்குள் வருவது வழக்கம். வாகா எல்லையை பாக். மூடியதால் ஏற்றுமதி தடைபட்டது.

இதை சரி செய்ய வாகா எல்லையை மீண்டும் திறக்குமாறு பாக்.கிடம் ஆப்கன் அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று நாளை முதல் ஆப்கன் ஏற்றுமதிக்காக வாகா எல்லையை திறக்க பாக். ஒப்புக் கொண்டுள்ளது.

*இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்:
அடுத்த 24 மணிநேரத்தில், 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்:
திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

*சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு.

*பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் மு.க.ஸ்டாலினுக்கு யார் ஆலோசனை கூறுவது?:
அமெரிக்க அதிபர் முதல் தமிழக முதல்வர் வரை அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர்.
மக்களுக்கு ஸ்டாலின் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

*ராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் - காங்கிரஸ் தலைமை அதிரடி.

*ஜூலை 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யபப்டுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
திருச்சி- செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், கோவை - காட்பாடி சிறப்பு ரயில் சேவைகள் ரத்து.

*சச்சின் பைலட்டின் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிப்பு.
சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*ரஷ்யா கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் முதல்கட்ட பரிசோதனை கடந்த மாதம் 18-ந் தேதி நடத்தியது. அச்சோதனை வெற்றிகரமாகவும் அமைந்தது. ரஷிய நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் 2-ம் கட்டமாக பரிசோதிக்கும் பணி 20-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை நடக்க உள்ளது.

*சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கு 2 நாட்கள் சிபிஐ காவல் - மதுரை மாவட்ட நீதிமன்றம். வருகின்ற 16-ஆம் தேதி மாலை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு.

*முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை. முதல்வர் பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை- தமிழக அரசு.

*புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு:
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்வு. மொத்த உயிரிழப்பு-18, சிகிச்சை பெறுவோர்-684, குணமடைந்தோர்-829.

*சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியில் ராணுவ வீரர் வீட்டில் இரட்டை கொலை.

அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் கொள்ளை.
ராணுவ வீரர் ஸ்டீபனின் தாய் மற்றும் மனைவியை கொலை செய்து நகைகள் திருட்டு. ராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருகிறார்.

*கேரள கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸிடமிருந்து பலமுறை தங்கம் வாங்கிய ஜலால் என்பவர் சரண்.

இதுவரை ரூ.60 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தியதாக சுங்கத்துறையிடம் வாக்குமூலம். திருவனந்தபுரம், நெடும்பாசேரி உள்ளிட்ட கேரளாவின் பல விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தியது அம்பலம்.

விமான நிலைய ஊழியர்களின் உதவியோடு தங்கம் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தவர், ஜலால்.
என்.ஐ.ஏ., சுங்கத்துறை விசாரணை தீவிரமடைந்த நிலையில் சுங்கத்துறையினரிடம் சரணடைந்தார், ஜலால்.

*தங்கம் கடத்தல் - மேலும் இரண்டு பேரிடம் விசாரணை:
கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோவையில் 2 பேரிடம் விசாரணை. கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்
நடவடிக்கை. கோவையில் 2 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரமீஷிடம் இருந்து தங்கத்தை வாங்கியதாக இருவர் மீதும் புகார். ஸ்வப்னா, ரமீஷ், சந்தீப் நாயரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை.

*சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரணம். மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் மரணம். உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 26ம் தேதி உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். உதவி ஆய்வாளர் மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4ஆக உயர்வு.

*தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு.

அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை கூட்டுறவு வங்கிகள் நிறுத்த உத்தரவு.ஸரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவு. நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது.

*ஆன்லைன் வகுப்புகள் - விதிமுறைகள் வெளியீடு: 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர் களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம். - மத்திய அரசு.

*10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சி மற்றும் பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

*10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்.

*மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

*மயிலாடுதுறை: குத்தாலத்தில் 5  நாட்கள் முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனோ வெருவித் தொற்று வேகமாக பரவி வருகிறது.இதனால் மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயலில் உள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு வணிகர் சங்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதியில் தாமாக முன்வந்து தன் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இதன் அடிப்படையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் பகுதியில்  நாளை முதல் வருகின்ற 19 தேதி வரை 5 நாட்களுக்கு  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*பண்ருட்டியில் தொடர் கடையடைப்பு பண்ருட்டியில் நாளை மறுதினம் 16.07.2020 வியாழன் முதல் 19.07.2020 ஞாயிறு தொடர் கடையடைப்பு ; பண்ருட்டி அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு.

*மதுரையில் நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவு:
நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். - ஆட்சியர் வினய்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்
15/07/20 முதல் 21/07/20 வரை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி வர்த்தக சங்கம் முழு கடையடைப்பு.

*திருச்சியில் பலத்த மழை
திருச்சி  மெயின்கார்டுகேட், பாலக்கரை, கண்டோன்மென்ட், தில்லைநகர் பீமநகர், கே.கே.நகர், காஜாமலை, ஏர்போர்ட்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முத்தரசநல்லூர், திருவரம்பூர், மணிகண்டம், பஞ்சப்பூர், பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை  பெய்து வருகிறது.

*ஆந்திராவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும்.
திட்டத்தை உடனே செயல்பாடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு.- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages