கொரோனா பாதிப்பின் நெருக்கடியில் மாணவ-மாணவிகள் மிகுந்த மனவேதனையில் உள்ள நிலை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல். - Agnipuratchi

கொரோனா பாதிப்பின் நெருக்கடியில் மாணவ-மாணவிகள் மிகுந்த மனவேதனையில் உள்ள நிலை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.

Share This

கொரோனா பாதிப்பின் நெருக்கடியில் மாணவ-மாணவிகள் மிகுந்த மனவேதனையில் உள்ள நிலை. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் இருந்து வந்த நீட் போன்ற நுழைவுத்தேர்வு 2007 லில் ரத்து செய்யப்பட்ட முன்னுதாரணம் உள்ளது. +2 வகுப்பு அரசு நடத்தும் பொதுத்தேர்வே போதுமானது. மீண்டும் நீட் தேர்வு தேவைற்றது. ஏழை-எளிய கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி எட்டாக்கனியாகிவிடும்,மறுக்கப்படும்
      
கொரோனா தொற்று ஒட்டுமொத்த மக்களையும் சிதைத்து முடங்க வைத்து காலங்கடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவ- மாணவிகளும் பெற்றோர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். அரசு நிர்வாகமும் முடங்கி,உற்பத்தித் துறை உள்ளிட்ட அனைத்தும் நிலைகுலைந்து உலகமே வேதனையில் இருக்கும் சூழலில் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்விக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( NEET NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST ) ரத்து செய்யப்பட வேண்டும். +2 வகுப்பில் அரசுதான் பொதுத் தேர்வு நடத்துகிறது.அந்த தேர்வின் மதிப்பின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்விக்கு சேர்க்கை நடத்தலாம்.இதிலேயே தகுதி தெரிகிறது.மேலும் தகுதியை அறிய ஒரு நுழைவுத் தேர்வு என்பது வசதிபடைத்த வீட்டுப் பிள்ளைகளுக்கும் NEETக்கு பணம் பறிக்கும் பயிற்சி நிறுவனங்களுக்காக நடத்தப்படுவது தான்.
  
இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இதேபோல் இதே தொழிற்கல்வியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு (ENTRANCE EXAMINATION) என்ற பெயரில் இருந்து அதை ரத்து செய்ய வேண்டுமென்று மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் தொடர்ந்து போராடி வந்தது அனைவருக்கும் தெரியும்.
       
அதன்பின்னர் சட்டமன்றத்தில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு என்பது ஏழை-எளிய கிராமப்புற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட தொழிற்கல்வி படிக்கச் செல்லவிடாமல் வடி கட்டுகிற நுழையாத்தேர்வு.இது சமூகநீதிக்கு எதிரானது. +2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சில மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியலை கையிலே வைத்துக்கொண்டு " இவர்கள் +2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.ஆனால் நுழைவுத் தேர்வில் இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.இதனால் இவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதேபோல் +2 வகுப்பு பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் மற்றும் உயர்கல்வி படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் வசதி படைத்தவர்கள் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து 2 மாத பயிற்சியின் குறுக்கு வழியில் இடம் பிடித்துள்ளனர்.ஏழை- எளியவர்கள் வசதியின்மையால் நன்கு படித்தும் +2 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் மனநிலை எப்படி இருக்கும்.இது மோசடி இல்லையா ? இது தான் தகுதியா ? திறமையா ? என பல ஆதாரங்களுடன் பல்வேறு கோணங்களில் வாதாடி 2007ம் ஆண்டு சட்டமன்றத்தில் "நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது" இது வரலாறு. பா.ம.கவுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக அன்று பேசப்பட்டது.
      
இதே நுழைவுத் தேர்வுதான் தற்போது மீண்டும் நீட் தேர்வு என வந்துள்ளது.இந்த சமூக அநீதி, ஏற்றத்தாழ்வு,மோசடி போக்கப் படவேண்டும்.எல்லாத் தரப்பினரின் வாய்ப்பை மறுக்கும்,தட்டிப்பறிக்கும் கேடான நீட் ( தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு-NATIONAL ELIGIBLITY CUM ENTRANCE TEST ) ரத்து செய்யப்பட வேண்டும். அதிலும் தற்போது கொரோனா தொற்று எல்லோரையும் முடங்க வைத்து வேதனையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் கட்டாயம் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages