அக்னிப்புரட்சி இன்றைய (15.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரிப்பு.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,80,248 ஆக உயர்ந்துள்ள நிலையில்,
குணமடைந்தோர் எண்ணிக்கை 78,39,676 ஆக அதிகரிப்பு.
*இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 29,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. பாதிப்பு எண்ணிக்கை 9,06,752 லிருந்து 9,36,181 ஆக அதிகரிப்பு.
24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 582 பேர் உயிரிழந்துள்ளனர்
உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,727 லிருந்து 24,309 ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 லிருந்து 5,92,032 ஆக அதிகரிப்பு. - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,291 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 80,961 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,167 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,02,310 பேர் குணமடைந்துள்ளனர்.
*இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்:
மதுரையில் 21 நாட்களாக நீடித்த முழு ஊரடங்கு நேற்றிரவுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்.
மதுரையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
*கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது:
ஏற்கனவே ஸ்வப்னா உள்ளிட்ட இருவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ள நிலையில், தற்போது எர்ணாகுளம் ஜலால், கொண்டாட்டி ஹம்ஜத் அலி, மலப்புரம் முகமது ஷபி ஆகிய 3 பேர் கைது.
*சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்.
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்.
ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்து வந்த 3 பேரிடம் போலீஸ் விசாரணை.
*கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16 முதல் 19ஆம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு.
*தங்க தேர் இழுக்க அனுமதி:
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி.
திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ - டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
*நான் பாஜகவில் இணையமாட்டேன் - சச்சின் பைலட்: ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சச்சின் பைலட் கருத்து.
*பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் அவரை பற்றி நினைவு கூறுவதை நான் பெருமையாக கருதுகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.
தமிழக மக்களின் வாழ்க்கை தரம், கல்வி முன்னேற்றம் உள்ளிட்டவற்றில் முதல்வராக இருந்த போது முத்திரை பதித்தவர் பெருந்தலைவர் காமராஜர் - எடப்பாடி பழனிச்சாமி.
*தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை
- அமைச்சர் செங்கோட்டையன்.
*கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் கடைபிடித்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி.
*சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு.
www.cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் முடிவுகள் வெளியீடு.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து.
பிசிஜி மருந்து சோதனை நடத்த முதலமைச்சர் உத்தரவு.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
பிசிஜி மருந்தை 60 - 95 வயது முதியவர்களுக்கு வழங்குவதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்பு.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவு.
*சச்சின் பைலட் இன்னும் இளம் வயதில் இருக்கிறார்; அவருக்கு கொஞ்சம் பொறுமை இருந்திருக்க வேண்டும். அவரது நடவடிக்கைகள் கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானவை.
- திக்விஜய சிங்.
*தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுகுறு, நடுத்தர தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு.
கடுமையான காலத்தில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் உடன் போராடி கொண்டிருக்கிறோம். நோய் பரவலை தடுக்க அரசு எடுத்த முயற்சி காரணமாக தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
*தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா நியமனம்.
*தலைநகர் சென்னையில் 2வது கொரோனா அலை இல்லை என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார்.
சென்னையில் அனைத்து மார்க்கெட்டுகளையும் கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத மார்க்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்படும். அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
*"ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் கூறியிருந்தது.
ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை.
போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது
கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக் குவதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
*திமுகவிற்கு தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு. யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை, யாருடைய நம்பிக்கைக்கும் திமுகவினர் எதிரானவர்கள் இல்லை - திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு.
*சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி 99.28% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடம்; 98.23% தேர்ச்சியுடன் பெங்களூரு 3ஆம் இடம்.
*16/07/20 முதல் 22/07/20 வரை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பஞ்சாயத்து பகுதியில் வர்த்தக சங்கம் முழு கடையடைப்பு அறிவிப்பு
*'ஜியோவில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள்’
ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்.
ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. - முகேஷ் அம்பானி.
*வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.
*சாத்தான்குளம் அருகே வடலிவிளையில் விளையாடச் சென்ற 7 வயது சிறுமி கொலை?:
தண்ணீர் டிரம்மில் சிறுமியின் உடல் இருந்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல். காட்டுப்பகுதி கால்வாயில் உடலை வீசிச்சென்றவர்கள் குறித்து சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை.
*விஷவாயு தாக்கி 2 பேர் பலி.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்குதல். தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடல்களை மீட்கும் பணி - போலீசார் விசாரணை.
*சந்தனக்காடு வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி.
மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம். கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் வீரப்பனின் மகள் வித்யா ராணி.
*மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு.- மின் வாரியம்.
2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 6 மாவட்டங்களுக்கு மட்டுமே நீட்டிப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி, மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் - மின்வாரியம்.
*காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
*பாமக தொடங்கி 31 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸு-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
*கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ - வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது. செந்தில்வாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
No comments:
Post a Comment