மதுரையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் தளர்வுகள் அமல் - Agnipuratchi

மதுரையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் தளர்வுகள் அமல்

Share This

மதுரையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் தளர்வுகள் அமல்
  
சென்னை;மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு நிறைவடைந்தது. இன்று முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வருகிறது.

வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா, மதுரை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள, கடிதம்:மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு, 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இன்று முதல், ஊரகப்பகுதிகளில், சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களை, பொது மக்கள் வழிபாட்டுக்கு திறக்க அனுமதிக்கலாம்.

வழிபாட்டின் போது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.நகர்ப்புற பகுதிகளில், அனுமதி கிடையாது.அனைத்து தொழிற்சாலைகளும், நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த சேவை நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

குறைந்தபட்சம், 20 சதவீத பணியாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்.வணிக வளாகம் தவிர்த்து, நகைக்கடை,ஜவுளிக்கடை போன்றவை, 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 8:00 வரை செயல்படலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages