அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2020) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,36,81,058 பேர் பாதிப்பு.
கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 5,86,127 பேர் உயிரிழப்பு.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 80,27,789 பேர் குணமடைந்தனர்.
உலகில் கொரோனா பாதிப்புடன் 50,67,142 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
*இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 606 பேர் உயிரிழந்துள்ளனர்
இதனால் பலியானோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள் - 6,12,814 ஆக உள்ளது. - மத்திய சுகாதாரத்துறை .
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,157 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 82,128 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 69 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,236 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர்.
*12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
மாணவிகள்: 94.80% தேர்ச்சி; மாணவர்கள்: 89.41% தேர்ச்சி.
+2 தேர்வு முடிவு - முதல் மூன்று மாவட்டங்கள்:
1. திருப்பூர் - முதலிடம் 97.12சதவீதம்பேர் தேர்ச்சி.
2. ஈரோடு இரண்டாமிடம் - 96.99 சதவீதம் பேர் தேர்ச்சி.
3. கோவை மூன்றாமிடம் - 96.39 சதவீதம் பேர் தேர்ச்சி.
*+2 தேர்ச்சி விகிதம்:
மாணவர்களை விட மாணவிகள் 5.39 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி.
12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாற்றத்திறனாளி மாணவர்களில் 2,506 பேர் தேர்ச்சி!
அரசுப் பள்ளிகளில் 85.94% பேர் தேர்ச்சி; மெட்ரிக் பள்ளிகளில் 98.70% பேர் தேர்ச்சி!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் உள்ள 7,127 பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சி.
மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
*விழுப்புரத்தில் கார் கவிழந்து விபத்து: 6 பேர் பலி: விழுப்புரம்: திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு.
நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓடையில் கவிழ்ந்தது.
*புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராஜா தப்பியோட்டம்.
*புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,689- ஆக உயர்ந்துள்ளது.
*தனியார் பள்ளிகள் நாளை வரை எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது.
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முடிவை தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்"- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவு.
*கோவில்பட்டி சோதனைச் சாவடியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது.
போலீசார் சோதனையின் போது, 3 பேர் பிடிபட்டனர். துப்பாக்கி, 5 தோட்டா, 2 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல். கைதானவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை.
*மின் கட்டணம் - வரும் 21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்-தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு. மின் கட்டணம் தொடர்பாக, ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
*திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு!
*கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது?:
8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிட கோரிய வழக்கு முடித்துவைப்பு.
*கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு.
அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழி உத்தரவு. அனைத்து விதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க அறிவுறுத்தல்.
*நாகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மாற்று வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடந்துவரும் சூழலில் நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்.
-ஆட்சியர் பிரவீன் நாயர்.
*சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வரையும் விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
*சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொலை வழக்கில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு:
நிவாரணம் வழங்க வலியுறுத்தி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உறவினர்கள் போராட்டம்.
மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் - உறவினர்கள். சிறுமி கொலை தொடர்பாக முத்தீஸ்வரன் மற்றும் நித்தீஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
*கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண்டைந்தார் சரணடைந்த சுரேந்திரனை தமிழகம் அழைத்துவர புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர் தமிழக காவல்துறை.
*மூவர் கொலை வழக்கு - மூன்று ஆயுள் தண்டனை:
விழுப்புரம்: எம். குச்சிபாளையம் கிராமத்தில் 2009-ஆம் ஆண்டு, மூன்று பேரை கொலை செய்த வழக்கில்; முக்கிய குற்றவாளி முருகனுக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 75 ஆயிரம் அபராதமும்; இரண்டாவது குற்றவாளி மதியரசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதமும் விதித்து, விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
*ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிட கோரி தீபக் தொடர்ந்த வழக்கு.
நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.
தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட பரிந்துரை.
இரு வேறு தீர்ப்புகள் வருவதை தவிர்க்க வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம்.
*போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியைக் கேட்டு வழக்கு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியைக் கேட்டு அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
*சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை.
ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் வழக்கு.
*வெளிநாட்டு விமானம் சேவை தொடங்குவது குறித்து 3 நாடுகளுடன் பேச்சுவார்த்தை-விமான போக்குவரத்துறை அமைச்சர் தகவல்.
ஜூலை 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை அமெரிக்கா 18 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இது ஒரு இடைக்கால சேவை என தகவல்.
^ஜெர்மனுக்கு விமானங்களை இயக்குவத குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.
*திருக்குறள் ஒரு புதையல்: பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்!
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்(புதையலாகும்).
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன். - பிரதமர் நரேந்திர மோடி
*முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.382.89 கோடி நிதி வந்துள்ளது:- உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.
*கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.
20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
tngasa.in tndceonline.org பல்நுட்பவியல் கல்லூரிகளில் சேர : tngptc.in tngptc.com
பாலிடெக்னிக் படிப்புகளில் சேரவும் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
கலை,அறிவியல் படிப்புகளில் சேர https://t.co/bPaKTWyGAN மற்றும் https://t.co/kObhJ23GgO என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்.
தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு https://t.co/DYLYd8MTG5,https://t.co/ZW58IfUkOZ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
*கைதி தப்பி ஓட்டம் - 2 காவலர்கள் சஸ்பெண்ட்: புதுக்கோட்டையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரம்.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முருகையன் மற்றும் கோபாலகுமார் சஸ்பெண்ட்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவு
*கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட்:
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு. துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் அறிவிப்பு.
*தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபிலுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஏற்கெனவே அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோருக்கு கொரோனா பாதிப்பு.
No comments:
Post a Comment