அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.07.2020) முக்கிய செய்திகள்.

*தமிழ்நாட்டில் இன்று மேலும் 4549 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில்,

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1,56,369. இதில் 1,07,416 பேர் குணமடைந்திருப்பதும் தமிழக மக்களுக்கு 46714 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 82128ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 5106 பேர் ஒரே நாளில் கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 45888 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று 69 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 2236ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாதிப்பு தாறுமாறாக அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது, நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  நம்பிக்கையளிக்கிறது.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 158 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,996-ஆக அதிகரித்து உள்ளது.

*ஜம்மு - காஷ்மீர் : குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

*கொரோனா தொற்றை தடுக்க அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இதே நிலைமை நீடித்தால் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் - ராகுல்காந்தி

*யு.ஏ,இ.,யின் செவ்வாய் ஆராய்ச்சி விண்கலம் ஏவும் தேதி ஒத்திவைப்பு
    
டோக்கியோ: ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் சார்பில் செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்கான விண்கலம் ஏவும் தேதி வரும் 22 ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளின் சார்பில் செவ்வாய்கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் வகையில் விண்கலம் ஒன்றை தயார் செய்திருந்தது.

இந்த விண்கலம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுப்பாதை மற்றும் வலிமண்டலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கிறது.

இதற்காக ஜப்பான் நாட்டின் தானேகாஷிமாவில் உள்ள விண்வெளி மையம் மூலம் செலுத்த ஏற்பாடு நடைபெற்றுவந்தது.

விண்ணில் செலுத்துவதற்கு ஏற்கனவே 2 முறை தாமதம் ஏற்பட்டது.

தற்போது ஜப்பானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முறையும் விண்கலம் ஏவுவது வரும் 22 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

*கங்குலியின் மூத்த சகோதரரான ஸ்னேஹஷிஸ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவ்ரவ் கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்...

* தாய்வான் ராணுவப் பயிற்சி!!!...
ஆக்கிரமிப்பு படைகள் தாய்வானை ஆக்கிரமிக்க முயற்சித்தாள் அதை எப்படி முறியடிப்பது என்று தாய்வான் ராணுவத்தினர் அதிநவீன பயிற்சி மேற்கொண்டனர்.

தாய்வானை சுற்றி சீனா படைகளை அதிகரித்து வரும் நிலையில் இது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

*ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்படுகிறதா? வெளியான தகவல்!

கொரோனா வைரஸ் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது வரை திறக்கவில்லை. அரசின் அனுமதியோடு திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு சில பணியாளர்களை திரையரங்குகளை சுத்தம் செய்து வருகிறார்கள். அதே வேலையில் சில திரையரங்கு சேர் உள்ளிட்ட பொருட்கள் எலிகளால் சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதனால் கிட்ட தட்ட கடத்த நான்கு மாதங்களோ எந்த திரைப்படமும் திரையரங்கில் ரிலீஸாகவில்லை. மாறாக, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின், பெண்குயின், போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் சில படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் கலகலப்பாக கூட்டம் அலைமோதி வரும் திரையரங்குகள், நான்கு மாதமாக வெறிச்சோடி கிடைப்பதால் இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உரிய பாதுகாப்புடன் திரைப்படங்கள் வெளியிட அரசு நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து ஒரு பக்கம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத பட்சத்தில், பாதுகாப்புகளுடன் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டால் ரசிகர்கள் வருவார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்கப்படுமா என்பதையும் பொருத்துவந்து தான் பார்க்க வேண்டும்.

* இளம்பிள்ளை அருகே ராசிகவுண்டனூரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சுரேஷ் (வயது 25), நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு செய்து பணம் வாங்கிக்கொண்டு வெளியே சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், காடையாம்பட்டி ஏரி அருகே உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் எப்படி இறந்தார்? என மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார்(24) ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமத்தில் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பிய போது, காந்திபுரம் பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். அவரது மனைவி சவுந்தர்யா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

* பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை உரிமத்தை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆத்தூர் தொலைபேசி நிலையத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

*மேட்டூர் மீன் விதைப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 லட்சம் மீன் குஞ்சுகள், மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கொழுஞ்சி நாதன் முன்னிலையில் அணையின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாபாலம் பகுதியில் விடப்பட்டன.

* சங்ககிரி அருகே சத்யா நகரில் உடற்பயிற்சிகூடம் அமைப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 25 பேர் காயம் அடைந்தனர். 13 மோட்டார் சைக்கிள்கள் கட்டையால் அடித்தும், கற்களை வீசியும் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

* மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில இருந்து 10 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.

* சேலம் அருகே உள்ள குப்பனூரை சேர்ந்த குருசாமி என்பவரும், அவரது சகோதரர் பால்ராஜ் என்பவரும் சிலிண்டர் வாங்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஓட்டல் தொழிலாளியான சீனிவாசனை தாக்கினர்.

* கெங்கவல்லி அருகே தலைஆடி பண்டிகைக்கு காதல் திருமணம் செய்த மகள் அருணாவை அவருடைய தந்தை பொன்மதி, தாயார் பாப்பாத்தி மற்றும் உறவினர்கள் அழைக்க சென்ற போது தகராறு ஏற்பட்டது. அப்போது மருமகன் இளவரசனின் தம்பி தமிழரசன், அவருடைய தாயார் கொடியரசி ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தலை ஆடிப்பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டத்தால் களை கட்டும் மேட்டூர் காவிரி ஆறு நேற்று கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடியது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages