அக்னிப்புரட்சி இன்றைய (18.07.2020) முக்கிய செய்திகள்
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,219 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 84,598 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 88 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,403 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர்.
*சென்னையில் இன்று டீசல் லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து 78.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை 20வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
*சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
*திருப்பதி ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயங்காருக்கு கொரோனா தொற்று உறுதி.
*மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா:
சென்னை: பூந்தமல்லியில் ஒரே நாளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:
கரையான்சாவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேர் கொரோனாவால் பாதிப்பு.
பொது சுகாதார நிறுவனம், நீதிமன்ற பணிகளில் ஈடுபட்டவர்கள் என்பதால் அதிகாரிகள் மத்தியில் அச்சம்.
*பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் தான் கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இந்த மூன்று நகரங்களில்தான் பரவல் அதிகளவில் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
*கோவையில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ராகுல் காந்தி கண்டனம்.
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது. சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டார் ராகுல் காந்தி.
*முருகரை பழித்துப் பேசியது கண்டிக்கத்தக்கது : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
*சென்னையில் மேலும் தளர்வுகள்?!
பொருளாதாரம் மீண்டு வரவேண்டும், மக்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமானால் இயல்பு நிலை வரவேண்டும். மேலும் தளர்வுகளுக்கு ஆயத்தமாகும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறோம். - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
*வரும் 27ம் தேதி தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்"-பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 158 பேருக்கு கொரோனா - தரிசனத்தை நிறுத்த காவல்துறை பரிந்துரை.
*புதுச்சேரியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரூ.330 வழங்கப்படும் -அமைச்சர் கமலக்கண்ணன்.
*ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்! நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
*மிதமான, நடுத்தர பாதிப்புடைய கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்த வேண்டும். தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
*கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து பதம் பார்க்கும் கொரோனா.
*சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் ஆய்வு செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல்.
No comments:
Post a Comment