அக்னிப்புரட்சி இன்றைய (19.07.2020) முக்கிய செய்திகள்.
* உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நேற்று 1 கோடியே 41 லட்சத்தை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
*அமெரிக்காவில் பாதிப்புக்குள்ளா னோர் எண்ணிக்கை 36 லட்சத்து 47 ஆயிரத்து 715 ஆகும்.
*இரண்டாம் இடத்தில் பிரேசில் (20 லட்சத்து 46 ஆயிரத்து 328) பேரும்
*மூன்றாவது இடத்தில் இந்தியா (10 லட்சத்து 38 ஆயிரத்து 716) பேரும்
*4-ம் இடத்தில் உள்ள ரஷியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 58 ஆயிரத்து 1 பேரும் .
*5-ம் இடத்தில் இருக்கிற பெரு நாட்டில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 537 பேரும்,
*6-ம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 594 பேரும்,
*7-ம் இடத்தில் இருக்கிற மெக்சிகோவில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 298 பேரும்,
*8-வது இடத்தில் உள்ள சிலியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 439 பேரும்,
*9-வது இடத்தில் இருக்கிற இங்கிலாந்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 804 பேரும்,
*10-வது இடத்தில் உள்ள ஈரானில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 440 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*2 லட்சத்துக்கு மேலான தொற்று பாதிப்புகளை கொண்ட நாடுகளாக பாகிஸ்தான், ஸ்பெயின், சவுதி அரேபியா, இத்தாலி, துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளன.
*உலகளவில் பலி 6 லட்சத்தை கடந்தது கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது?
கொரோனாவின் முதல் பலி, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நேர்ந்ததாக பதிவாகி இருக்கிறது.
சீனாவுக்கு வெளியே கொரோனாவின் முதல் பலி என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 1-ந் தேதி பதிவானது.
ஆசியாவுக்கு வெளியே முதல் பலி என்றால், அது பிரான்சில் பிப்ரவரி 14-ந் தேதி நேரிட்டது. கொரோனாவின் முதல் பலி நேர்ந்து 6 மாத காலம் ஆன நிலையில் உலகளாவிய பலி நேற்று 6 லட்சத்தை கடந்தது.
சரியாக சொல்வதென்றால், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தகவல்படி, நேற்று மதிய நிலவரப்படி உலகமெங்கும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 711.
*உலகளவில் கொரோனா பலியில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் பட்டியல் இது-👇
1. அமெரிக்கா (1 லட்சத்து 42 ஆயிரத்து106)
2. பிரேசில் (77 ஆயிரத்து 964)
3. இங்கிலாந்து (45 ஆயிரத்து 233)
4. மெக்சிகோ (38 ஆயிரத்து 310)
5. இத்தாலி (35 ஆயிரத்து 28)
6. பிரான்ஸ் (30 ஆயிரத்து 155)
7. ஸ்பெயின் (28 ஆயிரத்து 420)
8. இந்தியா (26 ஆயிரத்து 273)
9. ஈரான் (13 ஆயிரத்து 791)
10. பெரு (12 ஆயிரத்து 799)
*மேலும் 10 ஆயிரத்துக்கு அதிகமானோரை கொரோனாவுக்கு பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில்
11.நெதர்லாந்தும் (12 ஆயிரத்து 295)
12.ரஷியாவும் (12 ஆயிரத்து 106) இடம் பெற்றுள்ளன.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716லிருந்து 10,77,618ஆக உயர்வு:
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751லிருந்து 6,77,423ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273லிருந்து 26,816ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 1,70,693ஆக உயர்வு.
சென்னையில் இன்று மட்டும் 1,254பேர்கள் பாதிப்பு. மேலும், சென்னையில் மட்டும் 85,859பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 4,059ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,17,915ஆக உயர்வு.
ஒரே நாளில் 78பேர் பலியாகி உள்ளனர்.
இது வரை பலி எண்ணிக்கை 2,481ஆக உயர்ந்து உள்ளது. - தமிழக சுகாதார துறை .
*சென்னை வேளச்சேரி, மேடவாக்கம், ஆதம்பாக்கம், பள்ளிகரணை, கிண்டி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது,
*ஆப்கானிஸ்தானின் இந்து குஷ்ஷில் இன்று அதிகாலை 5:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது...! ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது...!
*குஜராத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
*ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
*தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
*இந்தோனேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் பலி
*கொல்கத்தாவிலிருந்து சென்னை உள்ளிட்ட 6 நகரங்களுக்கு விமான போக்குவரத்து தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு
*சீனா பெய்ஜிங்கில் தொடர்ந்து 13 நாட்களாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை
13 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 203ஆக அதிகரித்துள்ளது.
*அதிகரித்து வரும் கொரோனா தொற்று, வேலை இழப்பு, ஊரடங்கு போன்றவற்றால் இஸ்ரேல் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்
கொரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
*மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,535 கனஅடியில் இருந்து 3,588 கனஅடியாக உயர்வு. நீர்மட்டம் - 69.9 அடி, நீர் இருப்பு - 32.6 டிஎம்சி, வெளியேற்றம் - 10 ஆயிரம் கனஅடி
*கொரோனாவுக்கு வட்டாட்சியர் உயிரிழப்பு.
கடலூர்: விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
*கேரளா தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக துபாயில் வசிக்கும் பைசல் பரீத் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.
இன்டர்போல் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்தது என்.ஐ.ஏ.
*திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆடிக்கிருத்திகை விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை - கோவில் நிர்வாகம்
*அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது.
அமெரிக்க மக்களுக்கு தனிச் சுதந்திரம் இருக்க வேண்டும். எல்லோரும் மாஸ்க் அணிந்துவிட்டால் கொரோனா மறைந்துவிடும் என்பதை ஏற்கமுடியாது - டொனால்ட் டிரம்ப்.
*சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, தரமணி, in புழுதிவாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை.
*கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
*கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு:
கந்தசஷ்டி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சுரேந்தர், கடந்த 2 தினங்களுக்கு முன் புதுச்சேரியில் கைது. உரிய இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்ததாக புகார்.
*அரசு விதிக்கும் அபராதமா மின்கட்டணம்? - ஸ்டாலின் குற்றச்சாட்டு:
மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை.
கொரோனாவை விட மக்கள் மின் கட்டணத்தை கண்டு அச்சம்.
வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?
தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல
கேரளா, ம.பி. மகாராஷ்டிரா மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிப்பு.
மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா- திமுக தலைவர் ஸ்டாலின்.
*புதுச்சேரியில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1999 ஆக அதிகரிப்பு:
கொரோனா தொற்றில் இருந்து 1,154 பேர் குணமடைந்துள்ள நிலையில், 817 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
*சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு:
மாநகராட்சி வெளியிட்டது புள்ளிவிவரம்.
திருவொற்றியூர் - 505
மணலி - 239
மாதவரம் - 415
தண்டையார்பேட்டை- 765.
ராயபுரம். - 1100
திருவிக நகர் -1108
அம்பத்தூர். -892
அண்ணா நகர் -1561.
தேனாம்பேட்டை -1345
கோடம்பாக்கம் - 2082
வளசரவாக்கம். -730.
ஆலந்தூர் -512
அடையாறு -1088
பெருங்குடி - 338
சோழிங்கநல்லூர்-372.
*சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் சிலர் மீது புகார்கள் வந்துள்ளன - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தகவல்.
போலீஸ் மீதான புகார் குறித்து டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஆடி அமாவாசை தினமான நாளை தூத்துக்குடி கடற்கரை பகுதியில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை.
*ஐ.பி.எல் அணிகளில் இருந்து 2012 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்க்கு, ரூ.4800 கோடி இழப்பீடு வட்டியுடன் வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 11,999 கோயில்களுக்கு தினசரி பூஜையை மேற்கொள்வதற்கு கூட வருமானம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பள்ளிகளை எப்போது திறக்கலாம்? - மத்திய அரசு வேண்டுகோள்.
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம்?. பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்.
வரும் 20ஆ ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.
*இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து, மரணத்தை மறைக்கிறது மத்திய அரசு.
இந்த மாயை விரைவில் உடையும், இந்தியா அதற்கான விலையை கொடுக்கும் - ராகுல்காந்தி.
*இந்தியாவில் சமூகப் பரவலாக கொரோனா பாதிப்பு- இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை.
இந்திய மருத்துவர் சங்கத்தின் மருத்துவமனை வாரிய தலைவர் டாக்டர் விகே மோங்கா எச்சரிக்கை.
கிராமப்புறங்களில் கொரோனா பரவுவது அதிகரித்தால் மீள்வது சிக்கலாகிவிடும்- மோங்கா.
*கேரளாவில் சமூகப் பரவலாக கொரோனா பாதிப்பு என முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
*இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த படம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் எடுக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.182 கோடிக்கு மது விற்பனை. இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று மது விற்பனை அதிகரிப்பு. அதிகபட்சமாக மதுரையில் ரூ.42 கோடிக்கு மது விற்பனை.
*பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்தியாவிலேயே, அதிகபட்சமாக தற்போது தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு 48,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் -முதலமைச்சர் தகவல்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, தமிழக அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார்.
விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக, பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.
*கோயம்புத்தூரில் கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலத்தில் ஒருவர் கைது!
கோயம்புத்தூர் தனிப்படை போலீசாரால், சேலம் பள்ளப்பட்டியில் வைத்து கஜேந்திரன் என்பவர் கைது!
கைது செய்யப்பட்ட நபரை தனிப்படைப் போலீசார் கோயம்புத்தூர் அழைத்து வருகின்றனர்!
*கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது.
குற்றம்புரிந்தோர் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின்.
*ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை:
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது. - திருச்சி காவல் ஆணையர்.
*B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும். - அமைச்சர் கே.பி.அன்பழகன்.
இணையதள விண்ணப்பப் பதிவு ஆக. 16ஆம் தேதி நடைபெறும். எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கையும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என அறிவிப்பு.
*ஒரே நாளில் மூன்றாவது எம்எல்ஏ வுக்கு கொரோனா பாதிப்பு.
ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி.
இன்று வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மூன்றாவதாக ராணிப்பேட்டை எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
*திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் பைசல் பரீத் கைது.
துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டார், பைசல் பரீத்,
ஏற்கனவே ஸ்வப்னா உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பைசல் பரீத் கைது. ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல்.
ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்த பணம் என சுங்கத்துறை தகவல்.
*இந்தியாவில் தனியார் ரயில் சேவை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் - மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல். டெண்டர் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என்றும் தகவல்.
*ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.
கடலூர் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் வெட்டிக்கொலை. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.
No comments:
Post a Comment