அக்னிப்புரட்சி இன்றைய (20.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.07.2020) முக்கிய செய்திகள்.

*உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1,46,33,037 பேர் பாதிப்பு.

உலகில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,08,539 ஆக உயர்வு.

உலகில் கொரோனாவில் இருந்து 87,30,163 பேர் குணம் அடைந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 52,94,335  பேர் சிகிச்சை.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,298 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 87,235 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 70 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,861 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,21,776 பேர் குணமடைந்துள்ளனர்.

*கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது.

கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் அறிவிப்பு.

*ஒடிசாவின் சுஜான்பூர் கிராமத்தில் காணப்பட்ட அரிய வகை மஞ்சள் நிற ஆமை...

*புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்:

கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம்".

இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் - நாராயணசாமி.

மானிய கோரிக்கை விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என கூறி ஆளுநர் பட்ஜெட்டுக்கு அனுமதி மறுப்பு.

இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருந்த நிலையில் கிரண்பேடி மறுப்பால் குழப்பம். துணை நிலை ஆளுநரின் கடிதத்தை ஏற்க மறுக்கவில்லை என முதலமைச்சர் விளக்கம்.

*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு. முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

*கீழடியில் ரூ.12.25 கோடியில் அமைகிறது அகழ் வைப்பகம்:
காணொலி காட்சி மூலம் முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

*மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு:

செக்காணூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனாவால் பலி. ஜூன் 27 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

*2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி: பட்ஜெட் உரையை எதிர்த்து அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

*கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவக்கம்:
31 ஆம் தேதிவரை https://t.co/bPaKTWyGAN மற்றும் https://t.co/kObhJ23GgO ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92,000 இளநிலை இடங்கள் நிரப்பப்படும்.

*கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான விவகாரம். மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

தமிழக கூட்டுறவு வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லாததால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. கூட்டுறவு சங்க உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும்".

*மாணவி கொலை - இளைஞர் கைது:
கோவை பேரூரில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் ரதீஸ் என்ற இளைஞர் கைது. பச்சாப்பாளையம் வனப்பகுதியில் பதுங்கி இருந்தவரை கைது செய்தது போலீஸ். கைதான இளைஞரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல்.

*‘திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி’ - ஸ்டாலின்:
இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை. பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது. - மு.க.ஸ்டாலின்.

*புதுச்சேரி பட்ஜெட் முதல்வர் பேச்சு:
புதுவையில் காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு:
புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்.

காலை உணவாக இட்லி, பொங்கல், கிச்சடி ஆகியவை வரும் நவம்பர்  15 முதல் வழங்கப்படும்.

கருணாநிதி பெயரில் இத்திட்டம் தொடங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.

*"நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட மின் கட்டண கணக்கீட்டு முறையை குளறுபடி என்கிறார் ஸ்டாலின்"

*நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

*முரண்பட்ட கருத்துக்கள் தி.மு.க.வின் முரண்பாடான அரசியலை காட்டுகிறது - அமைச்சர் தங்கமணி.
அரசு வழங்கும் மின் சலுகைகளை மறைத்து பிற மாநிலங்களின் சிறிய சலுகைகளை கூறுவதா?
தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோக மின் கட்டணம்  மிக மிக குறைவு - அமைச்சர் விளக்கம்.

*கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது மத உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது.- உயர்நீதிமன்றம்.

மத்திய அரசின் விதிகளை பின்பற்றி, மத உணர்வுகள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்
உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்த குடும்பத்தினருக்கு அவகாசம் வழங்க வேண்டும்.

*ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம்.
கொரோனா தொற்று எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்ததால் நடவடிக்கை. மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு. நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தம்.

*சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல்.

காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய மூவரையும் 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ கோரிக்கை.
3 போலீசாருக்கும் 3 நாள் சிபிஐ காவல் - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

*கரூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை கரூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

*ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி-சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

*பத்திரிக்கையாளர்களை அதிமுக காக்கும் ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை துறையினரின் பாதுகாப்பை அதிமுக அரசு உறுதி செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்.

*ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு. கொரோனா தொற்று காரணமாக முடிவு. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது டி 20 கிரிக்கெட் தொடர்

*கொரோனா தடுப்பு மருந்து: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். சோதனை வெற்றி.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் சோதனை வெற்றி.

10கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளது பிரிட்டன்.

1077 பேருக்கு மருந்தை செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனை நல்ல பலன் தந்துள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு ChAdOx1 nCoV-19 என பெயரிடப்பட்டுள்ளது.

*கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு தொடக்கம்.
tngasa.in , tndceonline.org - இல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் 38 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

*மின்கட்டணத்திற்கு எதிரான திமுகவின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டனத்திற் குரியது. - துரைமுருகன்.

மின்கட்டணச் சுமையை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுப்பதில் என்ன அரசியல் இருக்கிறது?
அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நேரத்தில் மக்களிடம் இருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

*தமிழகத்தில் காய்கறிகளை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை. இடைப்பருவ காலத்தில் காய்கறிகளை பயிர்செய்யும் விவசாயிகள் மானியம் பெறலாம். பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் உழவன் செயலியில் பதிவுசெய்யலாம். - தமிழகஅரசு

*சென்னையில் மாஞ்சாநூல் மற்றும் பட்டம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் எச்சரிக்கை.

*தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். உத்தராகண்ட் முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் விரிவுரையாளராக தற்போது உள்ள அமுதாவுக்கு மத்திய அரசு பதவி வழங்கியுள்ளது.

*உதகையில் முக மறைப்பு அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பு

*இண்டிகோ வானூர்தி நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் 10 விழுக்காடு பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவிப்பு

*அதிகரித்து வரும் தொற்று காரணமாக  மேற்கு வங்க மாநிலத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் முழு ஊரடங்கு ஆணையை பிறப்பிக்க அம்மாநில அரசு முடிவு

*தமிழக அரசின் கொழுமைத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

*பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க ஆண்டுக்கு தலா ₹50,000 வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages