சுக்கா... மிளகா.... சமூக நீதி? விரைவில் தேர்வு வருகிறது. பாட்டாளிகளே தயாராகுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா அறிவிப்பு. - Agnipuratchi

சுக்கா... மிளகா.... சமூக நீதி? விரைவில் தேர்வு வருகிறது. பாட்டாளிகளே தயாராகுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா அறிவிப்பு.

Share This

சுக்கா... மிளகா.... சமூக நீதி? விரைவில் தேர்வு வருகிறது. பாட்டாளிகளே தயாராகுங்கள்! - மருத்துவர் இராமதாசு அய்யா அறிவிப்பு.

தமிழ்நாடு உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாறு குறித்து எனது முகநூல் பக்கத்தில் நான் எழுதி வரும் சுக்கா... மிளகா... சமூகநீதி? என்ற தலைப்பிலான தொடர் அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் தொடர் இம்மாத இறுதிக்குள் நிறைவடைகிறது.

ஏற்கனவே நான் அறிவித்தவாறு பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து அணிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு - சில விளக்கங்கள்

1. சமூக முன்னேற்ற சங்கத்தின் மூலம் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.

2. இரு அத்தியாயங்கள் ஒரு பாடத் தாள் ஆகும். அதாவது ஓவ்வொரு 2 அத்தியாயங்களுக்கும்  ஒரு தேர்வு நடத்தப்படும்.

3. ஒவ்வொரு தேர்விலும் 20 வினாக்கள் கேட்கப்படும்.

4. அனைத்து வினாக்களும் ஒற்றை வரியில் விடையளிக்கும் வகையில் இருக்கும்.

5. தேர்வு நேரம் 20.00 நிமிடங்கள் ஆகும்.

6.  விடைகளை பார்த்தும் எழுதலாம்

சுக்கா... மிளகா... சமூக நீதி? அளவுக்கு இந்திய, தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் குறித்து இந்தியாவில் எந்த நூலும் இதுவரை எழுதப்படவில்லை. சமூக நீதியின் கட்டற்ற கலைக்களஞ்சியம் (Encyclipedia of Social Justice)  என்று போற்றும் அளவுக்கும் சமூகநீதி தொடர்பான அனைத்துத் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சமூகநீதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியில்  உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் இதைப் படிக்க வேண்டியது அவசியமாகும். இத்தொடரை நீங்கள் படிக்கவில்லை என்றால் உங்களுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை என்று தான் பொருள்.

வாழ்க்கையில் நீங்கள் எத்தனையோ புத்தகங்களை படித்திருக்கலாம். ஆனால், சமூகநீதி வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள இத்தொடரை படிக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் நம்மைச் சூழ்ந்துள்ள சமூகநீதி ஆபத்துகளை எதிர்த்து போராட முடியும்.

ஆகவே, சுக்கா... மிளகா... சமூக நீதி? தொடரை படித்து வருபவர்கள் அனைவரும் மீண்டும், மீண்டும் படித்து அனைத்துத் தகவல்களையும் உங்கள் விரல் நுனியில் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது வரை படிக்காதவர்கள் உடனடியாக https://www.facebook.com/DrRamadoss என்ற முகவரியில் உள்ள எனது முகநூல் பக்கத்திற்கு சென்று சுக்கா... மிளகா... சமூக நீதி? தொடரை முதல் அத்தியாயத்தில் இருந்து உடனடியாக படிக்கத் தொடங்குங்கள்.

தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தேர்வு தேதி வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

ஆகவே..... பாட்டாளிகளே.... தேர்வுக்கு விரைந்து தயாராகுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages