அக்னிப்புரட்சி இன்றைய (21.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 1.48 கோடி மக்கள் பாதிப்பு.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 6.12லட்சம் பேர் உயிரிழப்பு.
கொரோனா தொற்றில் இருந்து 88.97 லட்சம் பேர் குணம் அடைந்தனர்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,18,043லிருந்து 11,55,191ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087லிருந்து 7,24,578ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,497லிருந்து 28,084ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நாளில் புதிதாக 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,130 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 88,377 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 75 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 2,626 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,894 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர்.
*சென்னையில் இன்று 15000 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.
80% நோயாளிகள் குணம் பெற்று இல்லம் திரும்பியுள்ளனர்.
நோய் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. -சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!
*ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதி மற்றும் சிறைக்காப்பாளருடன் ஏற்பட்ட தகராறில் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
*வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு.
ஆம்பூரில் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் நள்ளிரவு இறந்தார்.
*🟤🟤மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன்(85) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லால்ஜி டாண்டன் காலமானதாக அவரது மகன் அசுதோஷ் அறிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் லால்ஜி டாண்டன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
*மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். லால்ஜி டாண்டன் ஒரு திறமையான நிர்வாகி, பொது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் - பிரதமர் மோடி. உத்தரபிரதேச பாஜகவின் வளர்ச்சியில் லால்ஜி டாண்டனின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி.
*என்னுடைய மனைவி, மகன் உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எனக்கு கொரோனா தொற்று இல்லை. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
*திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கவுண்டர்களில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டது.
*ரஜினி மறுசிந்தனை செய்ய வேண்டும் என கூறுவது, தமிழ்நாடு உருப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை காட்டுகிறது - குருமூர்த்தி
*மின் உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு பதில் வேறு நாடுகளில் வாங்க இந்தியா முடிவு...
*ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது
முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது...
*ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு 14 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 16 அடியாக உயர்வு அணையின் முழு கொள்ளவு 47 அடி.
*மதுரை அருகே இளைஞர், மர்ம நபர்களால் வெட்டிக்கொலை
மதுரை அனுப்பானடியில் முத்துகுமார்(28) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முத்துகுமாரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகள்.
அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதி. காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்.
*மின்கட்டண குழப்பத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டம். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் மு.க.ஸ்டாலின் போராட்டம்.
*மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது.
மின்கட்டணம் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்த நிலையில் தேவையின்றி திமுக போராட்டம்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாஸ்க் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
*மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில்.
*கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் என்.ஐ.ஏ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு. இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று ஸ்வப்னாவுக்கு 3 நாள் காவல்.
*கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம் - சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை.
சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால் நீக்கம் - சைபர் கிரைம் போலீஸ். கந்த சஷ்டி சர்ச்சை வீடியோவை தொடர்ந்து நடவடிக்கை.
*நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எவ்வளவு?
2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு. சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தானாக முன்வந்து வழக்கு.
காப்பகங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.5.5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது - தமிழக அரசு.
*புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும். சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்து வலியுறுத்தல்.
சுகாதாரத் துறை அதிகாரிகளை கடிந்து பேசிய வார்த்தைகளை துணை நிலை ஆளுநர் திரும்பப் பெறவும் வலியுறுத்தல். கிரண்பேடி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார துறை ஊழியர்கள் 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு.
*புதுக்கோட்டை: போசம்பட்டியில் இரு தரப்பினர் மோதலை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு.
முன்விரோதத்தால் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் 2 பேர் காயம்.
*ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு.
திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்பு படுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு.
*நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும்- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை.
நலிந்த கலைஞர்கள், பேரிடர் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் - நீதிபதிகள்.
நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை.
*மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட, தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன்?" - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் வரை கேட்டு நிர்பந்தம் செய்யப்படுவதாக தகவல் வருகிறதே?
கொரானாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய பணம் கேட்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்".
மதுரை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி.
*சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்: சிபிஐ காவலில் உள்ள போலீசாரை சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை.
காவலர்கள் சாமத்துரை, வெயில்முத்து,
செல்லத்துரை ஆகியோரிடம் விசாரணை. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர்.
ஏற்கனவே 5 போலீசாரிடம் விசாரணை நடத்திய நிலையில் மேலும் 3 பேரிடம் சிபிஐ காவலில் விசாரணை நடைபெறுகிறது.
*சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது. ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகருக்கு மாநில உயர்நீதி மன்றம் உத்தரவு. சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் 24ஆம் தேதி தீர்ப்பு - உயர்நீதிமன்றம்.
*சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.
சட்டவிரோத காவலில் வைத்து தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்ததாக வடிவு என்பவர் மனு தாக்கல்.
*திருப்போரூர் துப்பாக்கி சூடு வழக்கு - திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்-செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு.
போலீசார் 3 நாள் காவல் கேட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் வழங்கியது நீதிமன்றம்.
திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு - எம்எல்ஏ மீது வழக்கு.
*வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா பரவல் காரணமாக ஜூலை 24ம் தேதி முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு!
காய்கறி, மளிகை கடைகள், மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு!
*தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஓராண்டுக்கு பதிவுகளை பாதுகாத்து வைக்க கோரி மனு. உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உள்துறை செயலாளர், டிஜிபிக்கு உத்தரவு. தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் கொடுத்த மனு மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை.
*நாளை முதல் கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து! கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் முழு ஊரடங்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா!
No comments:
Post a Comment