வன்னியர் சங்க ஆண்டு விழாவை யொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மருத்துவர் இராமதாசு அய்யா நன்றி!
இன்று வன்னியர் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு விழா!
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு வித்திடப்பட்ட நாள். சமுதாயத்தில் மிக மிக மிக மிக மிக பிற்படுத்தப்பட்டுக் கிடந்த ஊமை சனங்களுக்கு உரிமை பெற்றுத் தருவதற்காக அடித்தளம் அமைக்கப்பட்ட நாள். எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தியாகங்கள், எத்தனையோ வலிகள், எத்தனையோ வேதனைகள்.
அத்தனையையும் அரைகுறையாய் போக்கியது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நாம் பெற்றுத் தந்த 20% இட ஒதுக்கீடு தான். அதில் நமக்கு முழு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் நமது போராட்டத்தால் 107 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி.
இந்த நன்னாளில் உயிர்த்தியாகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் தியாகம் செய்த நமது சொந்தங்களை போற்றுவோம்!
வன்னியர் சங்க ஆண்டு விழாவை யொட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment