அக்னிப்புரட்சி இன்றைய (22.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.07.2020) முக்கிய செய்திகள்.

*உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 1.48 கோடி பேர் பாதிப்பு.

உலகில் கொரோனா தொற்றில் இருந்த 80.43 லட்சம் பேர் குணம் அடைந்தனர்.

உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14லட்சம்  இதுவரை உயிரிழந்துள்ளனர்.

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191லிருந்து 11,92,915ஆக உயர்வு.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,578லிருந்து 7,53,050ஆக உயர்வு.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084லிருந்து 28,732ஆக உயர்வு. - மத்திய சுகாதார அமைச்சகம்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - மேலும் இன்று 5849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரிப்பு.

சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,171 பேர் இவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 74 பேர் பலி. இவர்களோடு சேர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 4,910 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,31,583 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் - தமிழக சுகாதாரத்துறை.

*ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா  தொற்று.

*தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு!

*புதுக்கோட்டை மாவட்டம் போச்சம்பள்ளியில் மோதலை தவிர்க்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம்.

விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.

நேற்று இருதரப்பினருக்கிடையே மோதலை தடுக்க காவல் ஆய்வாளர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைகிறார்.

*ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும். ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்.

போட்டி அட்டவணை குறித்த விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்.
வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர், கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டம்.

*துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் ஈகோ பிரச்னை இல்லை நிதிநிலை அறிக்கைக்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை; நான் மனசாட்சியோடு பணியாற்றுகிறேன். - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

*கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டபிறகு 1-9ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்.

*சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க முடியாது: 
பாஸ்டேக் முறை கட்டண வசூலில் முறைகேடு என்பதற்கு ஆதாரம் இல்லை. பாஸ்டேக் முறையில் 2 மடங்கு சுங்க கட்டணம் என்கிற புகாருக்கு ஆதாரம் இல்லை - உயர்நீதிமன்றம்.

*தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது:

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4785 -க்கு விற்பனை.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,280. வெள்ளியும் விலையும் கணிசமாக உயர்வு... ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு விற்பனை.

*கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு:
நாளை மறுநாள் காணொலி மூலம் பங்கேற்க முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை. கேரளாவில் இதுவரை 13,994 பேர் கொரோனாவால் பாதிப்பு.

*அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு நில நடுக்கம் பதிவு. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

*ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரம்.

7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி.

தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதம் உயர்நீதிமன்றம் அதிருப்தி .

*கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும்.
கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கும் ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் - பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்.

*மின் கட்டண கணக்கீடு முறை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு. மின்சார சட்ட விதி 45(3)இன் படி மின் உபயோக அளவீட்டின் படியே கட்டணம் வசூலிக்க வேண்டும் - மனுதாரர்.

*தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை-கோவில்பட்டி அருகே கயத்தாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

*வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கம்.
சிறப்பு விமானங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை இயக்கம்- சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல். சென்னை விமான நிலையத்திற்கு 41, திருச்சி-11, கோவை - 4, மதுரை - 2 விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அரசு.

*முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 394 கோடி வரப்பெற்றுள்ளது.
கொரோனா பொது நிவாரண நிதி குறித்து தமிழக அரசு விளக்கம்.
தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி வந்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஐடிசி நிறுவனம் ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம் வழங்கியுள்ளது.
நிவாரண நிதி அளித்த அனைவருக்கும் முதலமைச்சர் நன்றி.

*சென்னை முழுவதும் காய்ச்சல் முகாம்!கொரோனா வைரஸ் ஒழிப்பில் சென்னை மாநகராட்சி பம்பரமாய் சுற்றி வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை நகரின் அனைத்து வீதிகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலமாக சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது மாநகராட்சி!

வீடு வீடாக  தன்னார்வலர்கள் மூலமாக நோய் தொற்று குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வது மிகுந்த பலனை அளித்துள்ளதாக நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினசரி 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காய்ச்சல் முகாம் மூலமாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

*தமிழில் பதவியேற்று கொண்ட எம்.பிக்கள்...!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான தம்பிதுரை, ஜி.கே.வாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எம்.பிக்களாக பதவியேற்பு!

*வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம்.

*மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444!
இன்றைய கொரோனா குறித்த அறிவிப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும் - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்!

*தென் இந்தியா முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தினசரி புதிய உச்சம் தான்..!
தமிழகம் 5849
ஆந்திரா 6045
கேரளா 1048

*தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60112 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

*சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசிய.

கொரோனாவில் இருந்து மீண்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் முதல் பிளாஸ்மா தானம் வழங்கினார்.

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை ஓர் ஆண்டு வரை சேமித்துவைத்து பயன்படுத்தலாம்.

ரெம்டெசிவிர் மருந்து பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
மரண எண்ணிக்கை தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் 20 லட்சம் பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
கூலிங் டெஸ்ட் மூலம் நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேர்வரை பரிசோதிக்க முடியும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages