அக்னிப்புரட்சி இன்றைய (24.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சமாக உயர்வு.
உலகம் முழுவதும் கொரோனாவால் 15,640,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 9,528,714 பேர் குணமடைந்துள்ளனர்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,38,635லிருந்து 12,87,945ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,607லிருந்து 8,17,209ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,861லிருந்து 30,601ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,299 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 92,206 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 88 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 3,320 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,504 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,43,297 பேர் குணமடைந்துள்ளனர்.
*ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு ஆவின் பால் முகவர்களாக வாய்ப்பு.
கொரோனா காலத்தில் வேலையிழந்து நிற்பவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு புதிய திட்டம். நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்கிறது ஆவின் நிறுவனம்.
*புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம்: துணை முதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு புதுவை அரசுக்கு வலியுறுத்தல்.
*இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக் காலம் வரை பணியாற்ற ராணுவ அமைச்சகம் அனுமதி. ராணுவத்தின் சிக்னல், சேவைப்படை, தளவாடப்படை உள்ளிட்டவற்றில் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்.
*தூத்துக்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கீதா ஜீவனின் மகள், மருமகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
*திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்:
கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. கொரோனா மரணங்களை மறைப்பதால் அரசுக் என்ன ஆதாயம்...
*கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.
மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம். கொரோனா மரணத்தை போல் கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.
- மு.க.ஸ்டாலின்.
*கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே காருக்குள் விளையாடிய 2 சிறுமிகள்உயிரிழப்பு.
விளையாடிக் கொண்டிருந்தபோது காரின் கதவுகள் லாக் ஆனதால் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு.
*சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கு கொரோனா. ஏற்கெனவே 2 சிபிஐ அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று.
*புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.700 வழங்கப்படும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
*சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா.
சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், போலீசார் பாதிப்பு.
தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பால்துரை மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
*புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,513 ஆக உயர்வு.
சிகிச்சை பெறுவோர்- 996, குணமடைந்தோர்- 1483.
*ஒரு சவரன் தங்கம் விலை 39ஆயிரம் ரூபாயை கடந்தது.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,032-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4879 ஆக உயர்வு.
*புதுச்சேரி சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை.
கடந்த 20ம் தேதி முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இன்று ஆளுநர் உரையாற்றினார்.
கிரண்பேடி பங்கேற்காததால், ஆளுநர் உரை இல்லாமலேயே புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கிரண்பேடி, தற்போது உரையாற்றுகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவை - அதிமுக வெளிநடப்பு.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.
*ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்வதற்கு உரிய சட்டங்களை இயற்ற வேண்டும்.
மத்திய-மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல். தெலுங்கானாவில் தற்போது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது - நீதிபதி.
*சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, மத்திய உள்துறை அமைச்சகம்.
கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு. டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி நடத்தப்படும் எனவும் விளக்கம்.
சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சரியான சமூக இடைவெளி கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தல்.
சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தல்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தல். கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும்.
*பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் தாமதம் ஆவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
*பாபர் மசூதி இடிப்பு வழக்கு - அத்வானி வாக்குமூலம்.
லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார், அத்வானி. காணொலி காட்சி வாயிலாக பதிவு செய்து வருகிறார் அத்வானி.
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அத்வானியிடம் நீதிபதி எஸ்.கே.யாதவ் வாக்குமூலம் பெற்று வருகிறார்.
ஆக.31க்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தினசரி விசாரணை.
*சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை - ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு.
தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவு.
தகுதிநீக்க நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி.
சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு.
*செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது - ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல்.
நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிப்பு.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
*நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்ட உண்மை சான்றிதழ் களை வழங்க கோரி சென்னை மாணவர் வழக்கு. பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். கலை, அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு உண்மை சான்றிதழ் தேவை எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உண்மை சான்றிதழ்களை வழங்க வேண்டும் சென்னை மாணவர்.
*கொரானா விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் 27ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் - திமுக.
*காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு.
இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தகவல். தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். - தலைமை தேர்தல் ஆணையம்.
*கொரானா விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் 27ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் - திமுக.
*புதுவையில் சைபர் கிரைம் முற்றிலும் செயலிழந்துவிட்டது - அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பேச்சு:
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை
யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - நாராயணசாமி எச்சரிக்கை.
கந்தசஷ்டி விவகாரத்தில், யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை
சமூக வலைதளங்களில், யார் தவறாக விமர்சனம் செய்தாலும் சைபர்கிரைம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் நாராயணசாமி.
சமூக வலைதளங்களில், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் ஒரு சிலர் செயல்பட்டு வருகின்றனர். எனவே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கோரிக்கை.
*பள்ளிக் கல்வித்துறை விளக்கம்.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது.
தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை.
*கேரள தங்கக்கடத்தல் விவகாரம்:ஸ்வப்னா உள்பட 11பேர் மீது கொச்சி அமலாக்கப்பிரிவும் வழக்கு:
அமலாக்கத்துறை வழக்கில் ஸ்வப்னா உட்பட 11 பேரை வரும் 27ல் ஆஜர்படுத்த எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு.
ஸ்வப்னா உள்ளிட்டோரை காவலில் விசாரிக்க அனுமதிகோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு.
*தென்காசி அருகே முதியவர் உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
*தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.76.50 கோடி ஒதுக்கீடு. மருத்துவமனை கட்டடங்கள், மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் நிதி பயன்படுத்தப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர்.
*குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமைத் தேர்தல் அதிகாரி. செப்டம்பர் 7 க்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.
*கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை பேரழிவு ஏற்பட்டது. தற்போது சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்; இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள் - ராகுல் காந்தி ட்வீட்.
*புதிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் பூஷன் மத்திய சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக நியமனம்.
*கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல்-எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகாரின் பேரில் செந்தில் வாசன் கைது செய்யப்பட்டார். கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 4பேர் கைது செய்யப்பட்டனர்.
*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். புதுச்சேரியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலை அவமதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
எம்ஜிஆர் சிலைக்கு மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் வேதனை அளிக்கிறது.
*கொரோனா நோயாளிகளை காணவில்லை. திருப்பதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2,300 பேரில் 236 பேரை காணவில்லை என காவல் துறையிடம் சித்தூர் ஆட்சியர் புகார்.
*கொரோனா நோயாளிகளிடம் வெறுப்புணர்வை காட்டாமல் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்:
கொரோனா நோயாளிகளிடம் பாதுகாப்புடன் விலகியிருந்து உதவிகளை செய்யலாம்.
கொரோனா குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி.
*இந்திய விமானப்படையின் மேற்கு மண்டல தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமனம்.
கோவையில் நாளை மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6 மணி வரைமுழு ஊரடங்கு! கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
*சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு ரூ. 100 அபராதம்-தாழம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை.
ஜூன் 26 ஆம் தேதி அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் வெளியானது. போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றபோது போலீசார் அபராதம் விதித்ததாக தகவல்.
No comments:
Post a Comment