அக்னிப்புரட்சி இன்றைய (27.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகளவில் கொரோனாவால் பாதிக்கக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக உயர்வு.
உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6.51 லட்சமாக உயர்வு.
இதுவரை 1 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,247 ஆகும்.
*இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,85,522 லிருந்து 14,27,622 ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,85,577 லிருந்து 9,55,909 ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 லிருந்து 32,963 ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் புதிதாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,138 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 95,857 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 77 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3,571 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர்.
*நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதா நீட்டிப்பதா என இன்று ஆலோசனை.
நாடு முழுவதும் 6-ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை.
*அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று.
அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவே உழைத்து இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டிய கலாமின் மறைவு நாட்டையே உலுக்கிய சம்பவமாகிப்போனது. இன்று கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்.
*ஆந்திர விவசாயிக்கு இலவசமாக டிராக்டர் வாங்கி கொடுத்தார் நடிகர் சோனுசூட்.
நடிகர் சோனுசூட் வாங்கி கொடுத்த டிராக்டர் விவசாயியின் வீட்டுக்கு வந்தது.
வறுமையால் மாடு வாங்க வசதி இல்லாமல் தனது மகள்களை பூட்டி உழுத விவசாயி.
விவசாயின் வருமை நிலையில் குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் சோனுசூட் உதவி.
வீடியோ:
https://twitter.com/TheSeithikathir/status/1287356439787233282?s=19 )
*வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், தி.மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
*ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது:
மத்திய அரசு மேல்முறையீடு செய்யாமல் தீர்ப்பை மதிக்கும் என நம்புகிறோம். - அமைச்சர் ஜெயக்குமார்.
*14 நாட்களுக்கு குறைவாக விதிக்கப்படும் எந்த ஊரடங்கும் பலனை தராது!” - ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கருத்து.
*கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு.
கந்தசஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் சுரேந்திரன்.
*மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்கியது மத்திய அரசு. தமிழகத்துக்கு மட்டும் ரூ. 12,305 கோடி விடுவிப்பு. 2019-2020 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு.
*நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் ஓ.டி.டி முறையில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து ஆரம்பத்தில் பயந்ததாக கூறிய அவர், அவ்வாறு வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியிருப்பது மக்கள் திரையரங்கில் படம் பார்ப்பதற்கு விரும்புவதை காட்டுவதாக தெரிவித்தார்
*கிராம கோவில்களை சீரமைக்க பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடி ஒதுக்கிய அரசாணைக்கு தடை கோரி வழக்கு.
பெரிய கோவில்களில் இருந்து வரும் நிதியை தற்போதைக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு.
*89 கல்லூரிகள் தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது:
தரமானது, தரமற்றது என இணைவு கல்லூரிகளை பாகுபாடு செய்யவில்லை. - அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.
*ரஷ்யாவை சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேர்மையுடனும், உண்மையுடனும் அரசு எடுத்து வருகிறது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகத்தில் மருத்துவ வசதிகள் உள்ளன - முதல்வர் பழனிசாமி.
*ஆஸ்கர் விருதுக்கு பிறகு தானும் இந்தி திரை உலகில் புறக்கணிக்கப்பட்டேன அங்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மனதளவில் உடைந்து விட்டேன்.நீ எங்களுக்குத் தேவையில்லை என்று பல தயாரிப்பு நிறுவனங்கள் தன்னிடம் சொன்னார்கள். ஆனாலும் பிராந்திய சினிமா கைவிடவில்லை. - ரசூல் பூக்குட்டி, திரை ஒலி கலைஞர்
*உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி.
உயர்திறன் சோதனை மையங்கள் மூலம், எதிர்காலத்தில் HIV, டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் செய்ய முடியும் - பிரதமர் மோடி.
இனிவரும் காலங்களில், தினமும் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர்.
நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர் திறன் பரிசோதனை மையங்கள் அமைப்பு.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி. முதலமைச்சர்கள் பங்கேற்பு.
புதிய ஆய்வகங்கள் மூலம் தினமும் 10,000 மாதிரிகளை பரிசோதிக்க முடியும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் உதவும்.
*சென்னை தியாகராய நகரில் ஆயுதப்படை எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
*காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரசார் கைது.
*நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று - ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
*காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது. அது இறைவனின் அடையாளம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை இறைவனாக நினைத்துப் காவித் துண்டைப் போட்டிருப்பார். – ராஜேந்திர பாலாஜி.
No comments:
Post a Comment