அக்னிப்புரட்சி இன்றைய (28.07.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.07.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.07.2020) முக்கிய செய்திகள்.

*உலக அளவில் 1.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1.02 கோடி ஆக உயர்வு.
உலக அளவில் கொரோனாவிற்கு 6.55 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்.

*இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு:

மொத்த பாதிப்பு - 14,83,156

குணமடைந்தோர் - 9,52,743

சிகிச்சையில் - 4,96,988

உயிரிழப்பு - 33,425- மத்திய சுகாதாரத்துறை.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,107 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 96,438 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 88 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3,659 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர்.

*ஒரு இலவச மாஸ்க் விலை ரூ. 6.45 - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
ரேசனில் இலவசமாக கொடுக்கும் மாஸ்க் ரூ.6.45 க்கு கொள்முதல் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.
ரேசன்கடைகளில் ஆகஸ்ட் 5 முதல் இலவச மாஸ்க் விநியோகம்.

*கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி, என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் பாலன் காலமானார்

*சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 2 போலீசாருக்கு கொரோனா:

எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் மேலும் 2 பேர் பாதிப்பு. காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி. சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*இளைஞர் உயிரிழப்பு - எஸ்.ஐ. மீது வழக்கு பதிவு: நெல்லை: கீழநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகையா போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம்.

உதவி ஆய்வாளர் ஐயப்பன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு. போலீசார் தாக்கியதில் சண்முகையா  உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நடவடிக்கை.

அஜாக்கிரதையாக இருந்து மரணம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் இயக்குதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு.

*செந்தில் வாசன் மீது குண்டர் சட்டம்:
கருப்பர் கூட்டம் செந்தில்வாசனை; குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு.

*இந்தியாவுக்கு புகழ் சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது: ஏ.ஆர்.ரகுமானுக்கு தனது மனப்பூர்வமான ஆதரவை தெரிவிப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்.

*கொரோனா பரிசோதனையில் குளறுபடி செய்ததால் திருச்சி உறையூர் சாலையில் உள்ள Doctor's Diagnostic Center என்கிற தனியார் பரிசோதனை மையத்திற்குச் முத்திரையிட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

*புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட  126 பேருக்கு எடுக்கப்பட்ட, கொரோனா  பரிசோதனையில் முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு கொரோனா இல்லை

*சவரன் ரூ.196 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.196 உயர்ந்துள்ளது. செனனையில் தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.5037-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னை ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

*தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் ஆலோசனை:

அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் , தலைமைச் செயகத்தில் ஆலோசனை.

கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களா? கிரேடு முறையா? என்பது குறித்தும் ஆலோசனை.

*+2 மறு தேர்வு - விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது:

நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு
விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. நாளை மறுநாள் முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டம்.

800 பேர் ஹால் டிக்கெட்டுகளை பெற்றிருந்த நிலையில், 500 பேர் தேர்வுக்கு வரவில்லை. 300 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.

*இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க கோரிக்கை.

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

*புதுச்சேரியில் மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,011ஆக உயர்வு.

*இந்தியாவில் உள்ள 50 புலிகள் சரணாலயமும் எந்த தரக் குறைபாடும் இன்றி நன்றாக உள்ளன.
இன்று தேசிய புலிகள் தினத்தையொட்டி, அதற்கான கையேட்டினை வெளியிட்டு; மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேச்சு.

*நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு:

இ-பாஸ் பெறாமல் கொடைக்கானல் பயணம் - நடிகர்கள் விமல், சூரி மீது ஊரடங்கு உத்தரவை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு.

*முன்னாள் பிரதமர் குற்றவாளி - கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு:
42 குற்றச்சாட்டுகளில் 7ல் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு.
மலேசிய பிரதமராக இருந்தபோது அரசு நிதியை தன் சொந்த கணக்குக்கு மாற்றி ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு.

*ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் காரணமாக கே.எஸ்.அழகிரி, 3 காங்கிரஸ் எம்பிக்கள் உள்பட 143 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

*பவானிசாகர் அணை திறப்பு - முதல்வர் உத்தரவு:
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பவானிசாகர் அணை திறப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

*பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா ரூ.10,000 வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் உத்தரவு.

*தமிழகத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

*கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூக்கு 5 நாள் சுங்கத்துறை காவல்:
ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கொச்சி நீதிமன்றம் அனுமதி.

*தமிழகத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

*சென்னை ஆட்சியருக்கு கொரோனா.
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

*புதுச்சேரியில் தேவையான மருத்துவர், செவிலியர் மற்றும் ஆஷா பணியாளர்களை நியமிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages