முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘ சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர் 31-ஆம் தேதி முதல் தேர்வு...
எளிய முறையில் எழுதலாம்!
பாட்டாளிகளே தயாராகுங்கள்!!
பாட்டாளி சொந்தங்களே....
முகநூல் பக்கத்தில் நான் எழுதி வரும் ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தொடரில் இதுவரை 47 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நான் அறிவித்தவாறு ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தொடர் குறித்த தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. முதல் தேர்வு வரும் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தேர்வுக்கான வினாக்கள் அடங்கிய இணைப்பு https://www.facebook.com/DrRamadoss என்ற முகவரியில் உள்ள எனது முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்கள் மூலமாகவும் அந்த இணைப்பு பகிரப்படும். எந்த ஆதாரத்திலிருந்து வேண்டுமானாலும் இணைப்பு எடுத்து தேர்வை எழுதலாம்.
இந்தத் தேர்வுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்புகளான வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் (எஸ்.ஐ.எஸ்), வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.
சுக்கா... மிளகா.... சமூகநீதி தொடரின் நோக்கமே சமூகநீதி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அனைவரும் அறிந்து, விரல் நுனியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். தேர்வின் நோக்கமும் அது தான். அதனால் தேர்வு மிகவும் எளிதான முறையில் நடத்தப்படும்.
தேர்வு - சில விளக்கங்கள்
1. சமூக முன்னேற்ற சங்கத்தின் மூலம் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.
2. இரு அத்தியாயங்கள் ஒரு பாடத் தாள் ஆகும். அதாவது ஓவ்வொரு 2 அத்தியாயங்களுக்கும் ஒரு தேர்வு நடத்தப்படும்.
3. 31&ஆம் தேதி நடைபெறும் முதல் தேர்வில் முதல் இரு அத்தியாயங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
3. ஒவ்வொரு தேர்விலும் 20 வினாக்கள் கேட்கப்படும்.
4. அனைத்து வினாக்களுக்கும் நான்கு விடைகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்தால் போதுமானது. இது மிகவும் எளிய நடைமுறை ஆகும்.
5. தேர்வு நேரம் 20.00 நிமிடங்கள் ஆகும்.
6. விடைகளை பார்த்தும் எழுதலாம்
ஆகவே, இதை தேர்வாக நினைத்து பதற்றமடையத் தேவையில்லை. இதை ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக கருதி ஆவலுடன் எதிர்பாருங்கள். சுக்கா... மிளகா... சமூக நீதி? தொடரை படித்து வருபவர்கள் அனைவரும் மீண்டும், மீண்டும் படித்து அனைத்துத் தகவல்களையும் உங்கள் விரல் நுனியில் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது வரை படிக்காதவர்கள் உடனடியாக https://www.facebook.com/DrRamadoss என்ற முகவரியில் உள்ள எனது முகநூல் பக்கத்திற்கு சென்று சுக்கா... மிளகா... சமூக நீதி? தொடரை முதல் அத்தியாயத்தில் இருந்து உடனடியாக படிக்கத் தொடங்குங்கள்.
தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தேர்வுக்கு இன்னும் 03 நாட்கள் மட்டுமே உள்ளன. முதல் தேர்வு முடிந்ததும் அடுத்தடுத்த தேர்வுகள் அறிவிக்கப்படும்.
ஆகவே..... பாட்டாளிகளே.... தேர்வுக்கு விரைந்து தயாராகுங்கள்!
No comments:
Post a Comment