+2 வகுப்பில் இன்று தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி.
+2 வகுப்பில் இன்று தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள். அடுத்து விரும்பிய உயர் கல்வி தொடர பெற்றோர்களுடன் ஆலோசித்து முடிவெடுத்து உயர வாழ்த்துக்கள் - +2 வகுப்பு தேர்ச்சியில் முதன்மையான இடங்களை பிடித்த திருப்பூர், ஈரோடு,கோவை,கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாராட்டுக்கள் - அதே நேரத்தில் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ள விழுப்புரம்,கடலூர், திருவண்ணாமலை,வேலூர், கிருஷ்ணகிரி,நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் தேர்ச்சி பெற அரசும் கல்வித் துறையும் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும்.
16.7.2020 இன்று வெளியிடப்பட்டுள்ள +2 வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ - மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதழையும் தெரிவித்துக்கொள் கிறேன். தொடர்ந்து நீங்கள் விரும்புகிற உயர் கல்வி பெற பெற்றோர்களுடன் ஆலோசித்து முடிவெடுத்து உயர வாழ்த்துக்கள்.மாணவிகள் தேர்ச்சி விகிதம்-94.80% ,மாணவர்கள் தேர்ச்சி விகிதம்-89.41%. +2 வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் முதன்மையான இடங்களைப் பெற்ற திருப்பூர்-97.12%, ஈரோடு-96.99%, கோயம்புத்தூர்-96.39%, கன்னியாகுமரி - 95.06%, திருநெல்வேலி - 95.01% உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ள விழுப்புரம் - 86.98%, கடலூர் - 86.33%, வேலூர் - 87.42%, திருவண்ணாமலை - 87.77%, கிருஷ்ணகிரி - 87.08%, நாகப்பட்டினம் - 87.10%, திருவாரூர்-88.45% உள்ளிட்ட மாவட்டங்கள் தொடர்ந்து குறைவான தேர்ச்சி பெறும் நிலையிலிருந்து மேம்பட, அதிக தேர்ச்சி விகிதம் பெற அரசும் பள்ளிக் கல்வித் துறையும் அதிக அக்கறை எடுத்து, சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்.
No comments:
Post a Comment