பாட்டாளி மக்கள் கட்சியின் 32 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை யொட்டி கவிஞர் ஜெயபாஸ்கரன்  படைத்த வாழ்த்துக் கவிதை - Agnipuratchi

பாட்டாளி மக்கள் கட்சியின் 32 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை யொட்டி கவிஞர் ஜெயபாஸ்கரன்  படைத்த வாழ்த்துக் கவிதை

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் 32 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை யொட்டி கவிஞர் ஜெயபாஸ்கரன்  படைத்த வாழ்த்துக் கவிதை

================================
பா.ம.க.  என்கின்ற
பாட்டாளிப் பேரியக்கம் !

கோடிக் கணக்கான மக்கள்
குலக் கடவுளாக வணங்கும்
மருத்துவர் அய்யாவின்
மாபெரும் பேரியக்கம்!

தமிழுக்கும் தமிழருக்கும்
தமிழ் மண்ணின் மாண்புக்கும்
துரோகங்கள் செய்வோரை
துரத்துகின்ற போர் முழக்கம்!

பேர் சொன்னால் பகை அடங்கும்,
போலிகளின் தொடை நடுங்கும்,
பா.ம.க. படை நடந்தால்
போர்க்களத்தில் வெடி முழங்கும்!

பாட்டாளிகள் தொண்டர்களின்
போர்க்களத்துத்  தியாகங்களைக்
கேட்டால் குலை நடுங்கும்
கணக்கெடுத்தால் கை நடுங்கும்!

அரசியல் கட்சிகள் இங்கே
ஆயிரக்கணக்கில் உண்டு,
அத்தனைக் கட்சிகளுக்கும்
அழகழகாய்ப் பெயர்களுண்டு!

இரும்புக்  கம்பம் ஒன்றை
எங்கிருந்தோ எடுத்துவந்து
கொடியேற்றி கூச்சலிடும்
கோமாளி கூட்டம் உண்டு!

விடுவிக்க வந்தோம் என்று
வீராப்பாய்ச் சொல்லிக்கொண்டு
நான்கைந்து வண்டிகளில்
நகர்வலம் வருவோர் உண்டு!

குன்றிமணி அளவும்
கொள்கை இல்லாதவர்கள்,
ஐந்தாறு முறை நாட்டை
ஆண்டுக் கொழுத்ததுண்டு!

கட்சியை ஆரம்பிக்க
கடிதத் தாள் கொடுப்பவர்கள்,
அச்சகத்திலேயே
அதை விட்டு வருவதுண்டு

அரசியல் இயக்கத்தின்
அடிப்படையே தெரியாமல்
கூட்டமாய் கூடி பின்னர்
காணாமல் போவோர் உண்டு!

வெளியேற்றப் பட்டவர்கள்
வேறு வழி தெரியாமல்
ஆண்டைக்குச்  சேவை செய்ய
ஆரம்பிக்கும் கட்சி உண்டு!

இத்தனைக்கும் நடுவினிலே
எழுந்த ஓர் இன முழக்கம்,
ஏதுமற்ற வர்க்கத்தை
இணைக்கின்ற புது முழக்கம்,

மருத்துவர் அய்யாவின்
மனம் கண்ட புத்தியக்கம்,
பா.ம.க.  என்கின்ற
பாட்டாளிப் பேரியக்கம் !

தமிழ்நாட்டு அரசியலில்
தனிச் சிறப்பு மிக்கதாய்,
தேவைகளின் காரணமாய்
தோற்றுவிக்கப் பட்டதாய்,

தனக்கென்று பா.ம.க.
தனிப் பெருமை பெற்றதாய்
தமிழ்நாட்டின் அரசியலை
தடம் மாற்றக் அற்றதாய்,

புது நெருப்பில் புடம் போட்டு
பூமிக்கு வந்ததாய்,
மருத்துவர் அய்யாவின்
தாய்மையிலே விளைந்ததாய்,

அரசியல் அறிந்தவர்கள்
அறிவிப்பு செய்தார்கள் -இது
மக்களின் அரசியலை
முன்னெடுக்கும் என்றார்கள்!

பத்தோடு பதினொன்று
அத்தோடு இது என்று
எதனோடும் சேராத
இயக்கம்தான் பா.ம.க.!

காற்றிலே அசைகின்ற
கட்சிக் கொடி போலன்றி
கைதட்டி நமை அழைக்கும்
கொள்கைக் கொடி பா.ம.க.!

வானத்து விடுதலையும்
வாழ்விழந்த மக்களும்
செங்குருதித்  தியாகமும்
சேர்ந்ததுதான் பா.ம.க.!

பொழுதுபோக்குப்  பூங்காவில்
பத்து பேர் கூடிப் பேசி
உருவான கட்சியென்ற
வரலாறு நமக்கு இல்லை!

ஏதோவொரு கட்சியினை
இரண்டாக உடைத்துக்கொண்டு
வந்தவொரு  கட்சியென்ற
வசைச் சொல் நமக்கு இல்லை!

வெள்ளித் திரை பார்த்து
விசிலடித்த கூட்டத்தை
அரசியலாய் வடிவமைத்த
அவலம் நமக்கு இல்லை!

இருக்கின்ற தொழில்களோடு
இதுவும் ஒரு தொழில் என்று
கட்சியைத் தொடங்கியதாய்
காரணம் நமக்கு இல்லை!

தேசியக் கட்சியொன்றின்
தென்னாட்டு வாலாகி
அடிக்கடி அதை ஆண்டும்
அருவருப்பு நமக்கில்லை!

அதைப்போல இதைப்போல்
என்றெல்லாம் நகலெடுத்து
பிறந்தவொரு கட்சியல்ல,
பாட்டாளி மக்கள் கட்சி!

இது-
மருத்துவர் அய்யா என்னும்
மானுடப்  பேராசான்-தன்
மனதிலே புடம் போட்டு
மக்களுக்குக் கொடுத்த கட்சி!

வாழ்வுரிமை கேட்டு
வழி மறித்த வன்னியரின்
உரிமைக் குரல் ஒலியில்
உருவான பெருங் கட்சி!

வட தமிழ் நாடெங்கும்
வெள்ளமெனப் பாய்ந்த நம்
வன்னியரின்  குருதியிலே
விளைந்தவொரு  புதுக்கட்சி!

துப்பாக்கிக் குண்டுகள்
துளைக்கின்ற நேரத்திலும்
அய்யா வாழ்கவென்று
அலறிக்கொண்டே சாய்ந்தவரின்,

வீர வரலாறுகள்
வீணாகக் கூடாதென்று,
மருத்துவர் அய்யாவின்
மனத்திலே எழுந்த கட்சி!

கொடுங்கோலர் தடியடியால்
குருதியிலே மூழ்கி
இறுதி மூச்சுக் காற்றை
இழந்த நம் உறவினர்கள்,

உரத்து  எழுப்பிய
உரிமைக் குரல் ஒலிகள்
ஒன்றாகச் சேர்ந்து
உருக் கொண்ட உயிர்க் கட்சி!

அடக்குமுறைச்‌ சட்டங்கள்
அத்தனையும். சந்தித்து
தமிழ்நாட்டின் சிறைகளிலே
தயங்காமல் நுழைகின்ற

பாட்டாளித் தொண்டர்களின்
தியாகங்களையெல்லாம் -தன்
கண்ணீரால் நனைத்துக்
கலங்கி நின்றபடி,

தானும் பல சிறையில்
தளைபட்டுக் கிடந்த நம்
மருத்துவர் அய்யா என்னும்
மாபெரும் தலைவர் கட்சி!

எண்பத்தொன்பதாம் ஆண்டில்
இதே ஜுலை -16-ல்
பல லட்சக் கணக்கான
பாட்டாளிச் சொந்தங்கள்,

அணிந்திடச் செருப்புமின்றி
அண்ணா சாலை நெடுக
அலை அலையாய் ஆர்ப்பரித்து
அய்யாவின் முகம் பார்த்து,

இவர் எங்கள் தலைவர் என்றும்,
இது எங்கள் கட்சி என்றும்,
உறுதியாய்க் குரல் எழுப்ப
உருப்பெற்ற நமது கட்சி!

நீக்கமறத் தமிழ் நாட்டில்
நிறைந்திருக்கும் கட்சிகளின்
மக்கள் நலப் பணிகளை
மறு ஆய்வு செய்ய வேண்டும்!

ஒப்பீட்டு அளவிலே
உண்மையாய்க் கணக்கிட்டால்
பா.ம.க.வை  மிஞ்ச இங்கே
இன்னொரு கட்சி இல்லை!

சாதிக் கட்சியென்று
சேற்றை வாரி வீசாதீர்,
என்றெல்லாம் எவனையும்
இனிமேல் கெஞ்ச வேண்டாம்!

எங்களது சாதனையை
இருட்டடிப்பு செய்யாதீர்!
என்றெல்லாம் எவரிடமும்
கோரிக்கை வைக்க‌ வேண்டாம்!

இது,
சாதிக் கட்சியல்ல- மக்களுக்குச்
சாதிக்கும் கட்சியென்று
மீண்டும் மீண்டும் நாம்
மெய்ப்பித்தப் பின்னரும்,

ஒரே கூச்சலைப் போட்டு- நம்மை
ஒடுக்க நினைப்பவரை
எள்ளி நகையாடி- நம்
இலக்கினை அடைய வேண்டும்!

அன்புமணி எனும் நமது
ஆளுமையின் ஆட்சிக்கு
தமிழகம் வசப்பட்டால்
தமிழினமே தலை நிமிரும்!

பா.ம.க. என்பது
பொழிகின்ற மழை மேகம்-அது
மாநிலத்தை உயிர்ப்பிக்கும்
மகத்தான நீராகும்!

பா.ம.க.என்பது
பாய்ந்து வரும் பெருங்காற்று
பாட்டாளி வர்க்கத்தின்
மூச்சாக அது மாறும்!

பா.ம.க. என்பது
பொதுவான உணவாகும்-அது
பசிக்கின்ற எவருக்கும்
தயங்காமல் பரிமாறும்!

காலம் நம் கைகளுக்குக்
காற்றைப்போல் விரைந்து வரும்-நமது
நவநீதம்மாள் பெயரன்
நாடாளும் வேளை வரும்!

பா.ம.க.என்னும் நம்
பேரியக்கம் வாழ்க வாழ்க!-தமிழ்
மாநிலத்தின் போராளி
மருத்துவர் அய்யா வாழ்க!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages