சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது போன்று தமிழ்நாடு அரசு நடப்பாண்டுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் அதிக அளவில் பாடங்களை குறைக்க வேண்டும்.- பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.
உலக அளவில் மனித குலத்தையே முடங்க வைத்து கோரத்தாண்டவமாடும் கொரோனா தொற்று பாதிப்பினால் பள்ளிகள் முடப்பட்டுள்ளன.இன்னும் எத்தனை நாட்கள் ? எத்தனை மாதம் இந்த பாதிப்பு நீடிக்கும் என்றும் அறுதியிட்டு கூற இயலாது.மாணவ - மாணவிகள் மிகுந்த மன அழுத்தத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் அவலம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் 2020 - 2021 நடப்பாண்டுக்கான பள்ளிப் பாடத்திட்டம் குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டிம்.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் ஓராண்டுக்கான பாடத்திட்டத்தை பள்ளிகளில் நடத்திடவும் முடியாது. பள்ளி மாணவ - மாணவிகள் கற்கவும் முடியாது.
எனவே தமிழக அரசு கொரோனா பாதிப்பை உணர்ந்து மாணவ - மாணவிகள் நலன் கருதி நடப்பாண்டு பள்ளிப் பாடத்திட்டத்தில் மிக அதிக அளவில் கணிசமான பாடங்களை குறைக்க வேண்டும்.
No comments:
Post a Comment