அக்னிப்புரட்சி இன்றைய (31.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகில் கொரோனா தொற்றால் 16,812,755 பேர் பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் 6,62,095 பேர் இதுவரை மரணம்.
ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
ஒரே நாளில் உலகம் முழுவதும் 5,999 பேர் தொற்றால் மரணம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,013 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 99,794 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 97 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3,935 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர்.
*சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10-க்குள் முடிக்க வேண்டும்.
2 மற்றும் 3ஆம் ஆண்டு, முதுகலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஆக. 3 முதல் நடத்த வேண்டும்
முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும்"- சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவு.
*மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா:
கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,073ஆக உயர்வு. 8221 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 2384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 233 பேர் உயிரிழப்பு.
*திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் கைது! கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாக வேலு பிரபாகரன் கைது.
*இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி.
திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளை பின்பற்றி அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் - முதலமைச்சர்.
*திருவள்ளூர் மாவட்டம் மீச்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை சேதம் செய்யப்பட்டுள்ளது.
பெரியாரின் வெண்கல சிலையில் முகப்பகுதி, கண்ணாடி மர்ம நபர்களால் சேதம் அடைந்துள்ளது.
*காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி.
கல்விக் கொள்கையை காங். தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரித்தநிலையில் கே.எஸ்.அழகிரி ட்வீட். கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு, வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை - கே.எஸ்.அழகிரி.
*சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுகிறது.
சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படுகிறது - முதல்வர் பழனிசாமி.
*எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்:
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.
*தற்பொழுது தமிழகத்தில் +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது... +1 தேர்வில் 96.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது:
பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி.
பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினர் தேர்ச்சி. பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களில் 94.38 விழுக்காட்டினர் தேர்ச்சி.
பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
இயற்பியல் - 96.68 சதவீதம், வேதியியல் - 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
உயிரியல் - 97.64 சதவீதம், கணிதம் - 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
தாவரவியல் - 93.78 சதவீதம், விலங்கியல் - 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி
கணினி அறிவியல் - 99.25 சதவீதம், வணிகவியல் - 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி
கணக்குப் பதிவியியல் - 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி
பிளஸ் 1 தேர்ச்சி - கோவை முதலிடம்
பிளஸ் 1 தேர்வில் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம்
பிளஸ் 1 தேர்வில் 97.90 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம்
*12ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவு வெளியீடு. மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி என அறிவிப்பு.
அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே என தகவல்.
*கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்:
குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார் சஸ்பெண்ட்.
முன்னாள் ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட். நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை.
*ஆந்திராவில் கிருமி நாசினி கலந்த சாராயம் குடித்த 8 பேர் பலி:
ஆந்திராவில் அதிக போதைக்காக சாராயத்தில்; கிருமிநாசினி கலந்து குடித்த 8 பேர் உயிரிழப்பு.
பிரகாசம் மாவட்டத்தின், குரிசேடு கிராமத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கள்ளசாராயம் குறித்த தகவல்.
மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்; உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் தகவல்.
*தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு: ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்துக்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,125க்கு விற்பனை.
*விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் 'அண்ணாத்த சேதி' என்னும் முதல் பாடல் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு.
*கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக் கான ஊதிய நிலுவை விவகாரம். ஒரு வாரத்திற்குள் வழங்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
*அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் ஊதியப் பிடித்தத்தை எதிர்த்த வழக்கு ஆக. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
*உச்சநீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது - நீதிபதிகள்.
*பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை.
10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏவை விடுதலை செய்து உத்தரவு.
*கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்.
குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார் சஸ்பெண்ட்.
முன்னாள் ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட்-நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை.
*கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 10ம் வகுப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை:
ஆன்-லைனில் படிக்க செல்போன் வாங்கித் தராததால் விபரீத முடிவு என தகவல். சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த 15 வயது மாணவர் தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் தற்கொலை. செல்போன் வாங்க தன்னிடம் பணம் இல்லை என பெற்றோர் கூறியதால் மன விரக்தியில் முடிவு.
*ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்:
குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள், மனநலன், உடல் நலன் பாதிக்கும் என புகார். புகாரை ஏற்று மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
*திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும்.
திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- தமிழக அரசு.
*கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக வழக்கு:
யூ-டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு. மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சமூக வலை தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.
*நாளை மாலை 4:30க்கு பிரதமர் மோடி உரை: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
*மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுங்கள் - உச்சநீதிமன்றம்.
பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுங்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
*பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை.
மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு.
மார்ச் மாதம் விற்கப்பட்ட பி.எஸ்.-4 வாகனங்கள் குறித்து அதிருப்தி.
வாகன விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என குற்றச்சாட்டு.
*ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
*சென்னை - கொல்கத்தா விமான சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து:
கொல்கத்தா விமான நிலையத் திலிருந்து சென்னை, டெல்லி உட்பட 6 நகரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விமான போக்குவரத்திற்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிப்பு.
- மேற்குவங்க அரசு.
*நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது - உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்:
தென்காசியை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்:
நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து உடலை பெற்றுக் கொள்கிறோம் - விவசாயி மகள் வசந்தி.
எட்டு நாட்களுக்குப் பிறகு உடலை வாங்கிக் கொள்ள உறவினர்கள் ஒப்புதல்.
கடந்த 22ம் தேதி வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழப்பு.
உயிரிழப்பிற்கு வனத்துறை அதிகாரிகள் காரணம் என குற்றச்சாட்டு.
மதுரை உயர்நீதிமன்ற கிளை மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில் உடலை வாங்க சம்மதம்.
*உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக புகார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் அரசு வழக்கறிஞர் முறையீடு.
முழு கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் குறித்து ஆகஸ்ட் 17ல் அறிக்கை அளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு.
முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை.
*மீன்பிடிக்க இரட்டை மடி வலை பயன்படுத்தப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க இரட்டை மடி வலையை பயன்படுத்த தடை உள்ளதை சுட்டிக் காட்டி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
*பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் இன்று, கடலூர் - கண்டரக்கோட்டையில் பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.33 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கும்; தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ரூ.247.90 கோடியிலான 21 திட்டப் பணிகளுக்கும் காணொளிக்காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
*ஞாயிற்றுக்கிழமைகளில் முழுபொதுமுடக்கம் என்பதால் ஆகஸ்ட் மாதத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.
*கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் மருந்துகளை வழங்க பரிந்துரை
சித்த மருத்துவம், ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயுர்வேத சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது.
*இந்தியாவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து:
- விமான போக்குவரத்து இயக்குநரகம்.
இந்தியர்களை அழைத்து வர மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும்.
*பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார். பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக் குறிப்புகள் திருடு போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment