மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா... சமூகநீதி? நாளை மறுநாள் (02.08.2020) இரண்டாம் தேர்வு...! பாட்டாளிகளே விரைந்து தயாராகுங்கள்!! - Agnipuratchi

மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா... சமூகநீதி? நாளை மறுநாள் (02.08.2020) இரண்டாம் தேர்வு...! பாட்டாளிகளே விரைந்து தயாராகுங்கள்!!

Share This

மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா... சமூகநீதி?
நாளை மறுநாள் (02.08.2020)  இரண்டாம் தேர்வு...! பாட்டாளிகளே விரைந்து தயாராகுங்கள்!!

பாட்டாளி சொந்தங்களே....

முகநூல் பக்கத்தில் நான் எழுதி வரும் ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தொடரின் அடிப்படையிலான  முதல் தேர்வு இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியுள்ளது.  ஆயிரக்கணக்கான சொந்தங்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். பலரும் வியக்கத்தக்க வகையில் சரியான விடைகளை எழுதியுள்ளனர். பாட்டாளி சொந்தங்கள் சமூகநீதி தடாகத்தில் மலர்ந்த மலர்கள் என்பதை இதுவரை தெரியவந்துள்ள  முடிவுகளில் இருந்து அறிய முடிகிறது.

இனி நாம் இரண்டாம் தேர்வுக்கு தயாராவோம்....

இரண்டாம் தேர்வு  நாளை மறுநாள்  ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். ஞாயிறு காலை 10.00 மணிக்கு தேர்வுக்கான வினாக்கள் அடங்கிய இணைப்பு https://www.facebook.com/DrRamadoss என்ற முகவரியில் உள்ள எனது முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட பிற சமூக ஊடகங்கள் மூலமாகவும் அந்த இணைப்பு பகிரப்படும். எந்த ஆதாரத்திலிருந்து வேண்டுமானாலும் இணைப்பு எடுத்து தேர்வை எழுதலாம். அத்தியாயம் 3. இடப்பங்கீடு மறுப்பும், முதலாவது அரசியல் சட்டத் திருத்தமும், அத்தியாயம் 4.காகா கலேல்கர் ஆணையமும், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அறிக்கையும் ஆகிய இரு அத்தியாயங்களில் இருந்து  இரண்டாம் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும்.

ஒரு குழந்தைக்கு தாய் எவ்வாறு பால் புகட்டுவாளோ, அதே போல் மிகவும் எளிமையான முறையில் பாட்டாளிகளுக்கு சமூகநீதி அறிவுப்பால் புகட்டுவதற்காகவே இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகள் கடினமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தேர்வு எவ்வளவு எளிது, அது எந்த அளவுக்கு சமூகநீதி அறிவை வளர்க்க உதவும்? என்பது குறித்த விவரங்கள் எல்லாம் முதல் தேர்வு அனுபவத்திலிருந்து  விளங்கியிருக்கும். விடைகள் தெரியவில்லை என்பதற்காக கவலைப்படத் தேவையில்லை. விடைகளை பார்த்தே எழுதலாம்.

ஒவ்வொரு தேர்வையும் சரியாக புரிந்து எழுதினால், இந்த தேர்வுகளின் முடிவில் நீங்களும் ஒரு சமூகநீதி வல்லுனராக மாற முடியும். அது தான் எனது நோக்கமும் கூட.

இந்தத் தேர்வுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்புகளான வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் (எஸ்.ஐ.எஸ்), வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்  கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஆகவே..... பாட்டாளிகளே.... இரண்டாம் தேர்வுக்கு விரைந்து தயாராகுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages