தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிப்பு சில தளர்வுகளுடன் தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருவதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நேற்று 29.7.2020 வரை 2,34,114 பேர். நேற்று ஒரு நாள் மட்டும் பாதிப்பு 6,426 பேர். இதுவரை உயிரிழப்பு 3,741 பேர். கடந்த 7 நாட்களுக்குமேல் ஒவ்வொரு நாளும் 6000க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மனித குலத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருகின்ற, முடங்க வைத்திருக்கின்ற கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துகொள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம். மிக மிக முக்கியம் . மறவாதீர்கள். தற்காப்பே பாதுகாப்பு
No comments:
Post a Comment