முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விடலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் பரிசோதனை முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தினமும் 550 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
காய்கறி சந்தை, சூப்பர் மார்க்கெட், முடி திருத்தகம் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ள தாகாவும், இதை கண்காணிக்க 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment