கோவையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகர் முழுவதும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அறிக்கை கூறியுள்ளார்
கோவையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநகர் முழுவதும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என மாநகராட்சி சார்பாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. மாநகர் முழுவதும் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன.
மாநகர் முழுவதும் கொரோனாவை தடுக்கும் தீவிர நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, நோய் அச்சுறுத்தல் உள்ள பகுதி, பொதுவானப் பகுதி என 3 வகையாக மாநகராட்சி பகுதிகள் பிரிக்கப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரித்து அங்கு வசிப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை & கொரோனா கண்டறியும் பரிசோதனையும், செய்து தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இங்கு எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை.
மக்கள் அதிகம் கூடும் "நோய் அச்சுறுத்தல் உள்ள பகுதி"களில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும், விரைவில் மற்றவர்களுக்கு பரவி விடுவதால் இப்பகுதிகள் தடுப்புகள் வைத்து தனிமைப்படுத்தப்படுகின்றன. இங்கு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் அனுமதிக்கப்படும்
நெருக்கம் குறைந்த, தொற்று கண்டறியப்படாத பொதுவான பகுதிகளில் அரசு கூறிய அனைத்து கட்டுப்பாடுகள் & விதிமுறைகளை பின்பற்றி, நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
No comments:
Post a Comment