சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. - Agnipuratchi

சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.

Share This

சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.

கார்கில் போர் வெற்றி தினம் இன்று - பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது.

ஆனால் பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது.

ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது.

கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலி.
நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் அதிகம்.

இறப்பு சதவீதமும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கிறது.

முகக் கவசம் அணிவது, 6 அடி இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்ப கூடாது.
மாஸ்க்-ஐ அகற்ற தோன்றினால், நமது மருத்துவர்கள், செவிலியர்கள் நினைத்து பாருங்கள்.

நம்மை காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் பல மணிநேரம் முக கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர்.

அடுத்த மாதம் 7-ம் தேதி தேசிய கைத்தறி நாள் கடைபிடிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய பிரதமர், அனைவரும் கைத்தறிப் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

ஒரு காலத்தில் விளையாட்டுத்துறை மற்றும் பிற துறைகளில் பெரும்பாலானோர் பெருநகரங்கள், வசதியான குடும்பங்கள், புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் இருந்து வந்தவர்களாக இருப்பர்

ஆனால் இப்பொழுது சிறிய கிராமங்கள், ஏழைக் குடும்ப இளைஞர்கள் சாதிக்கிறார்கள்

ஒருபுறம் கொரோனா, மறுபுறம் வெள்ளப்பெருக்கு எனும் சவால் நிலையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

பெரு வெள்ளத்தால் பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மத்திய மாநில அரசுகள், பேரிடர் மீட்பு படைகள், தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages