அக்னிப்புரட்சி இன்றைய (26.07.2020) முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.61 கோடி ஆக உயர்வு.
உலக அளவில் கொரோனாவில் இருந்து 99.7 லட்சம் பேர் மீண்டனர்.
உலக அளவில் கொரோனாவிற்க 6.47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
*இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,36,861லிருந்து 13,85,522ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,49,432லிருந்து 8,85,577ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358லிருந்து 32,063ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம்.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
இன்று ஒரே நாளில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 94,695 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 85 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 3,494 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,471 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர்.
*தமிழகத்தில் இன்று முழு லாக்டவுன் அவசியமின்றி வெளியே வந்தால் தண்டனை.
தமிழகத்தில் இன்று முழு லாக்டவுன் அவசியமின்றி வெளியே வந்தால் தண்டனை. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.
*சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் அரசு இசைக் கல்லூரியில் UG, PG, Ph.D., படிப்புகளில் சேருவதற்கும் நாளை முதல் ஆகஸ்ட் 17 வரை https://t.co/0mi0ZsF6jY இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
மஹாபலிபுரத்தில் உள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் 4 ஆண்டு கால https://t.co/JIXYc80xoI., @ BFA பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 17 வரை https://t.co/0mi0ZsF6jY என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
*வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.
31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை. ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து கருத்து கேட்க உள்ளார் முதல்வர். மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு.
*ரேஷன் கடைகளில் இலவசமாக முக கவசம் வழங்கும் திட்டம். நாளை தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முக கவசம் வழங்கப்படும்.
முதலில் கிராமப்புறங்களில் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.
*தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை:
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு.
திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கு மது விற்பனை.
மதுரை - ரூ.40.75 கோடி, சேலம் - ரூ.39.40 கோடி, கோவை - ரூ.35.9 கோடிக்கு மது விற்பனை.
*புதுச்சேரியில் கார்கில் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மலர்தூவி மரியாதை: கடற்கரை சாலையில் உள்ள நினைவுச்சின்னத்தில் சபாநாயகர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை.
*வட இந்திய கலை உலகம் தமிழ்நாட்டு பெண் மான்களை பேணும் அளவிற்கு தமிழ்நாட்டு ஆண் மான்களை ஆதரிப்பதில்லை
ரகுமான் நீங்கள் அரிய வகை ஆண் மான் ரகுமானுக்கு எல்லை வடக்கில் மட்டும் இல்லை - கவிஞர் வைரமுத்து
*பிரதமர் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தம்முடன் கலந்துரையாடியதை நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகா மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.
லாரி ஓட்டுநரான தமது தந்தை நன்கு படிக்க வைத்ததால்தான் CBSE +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
*நடிகை வனிதா புகாரில் கைதான சூர்யா தேவிக்கும், கைது செய்த பெண் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதியானது; தொற்று உறுதி செய்யப்பட்ட சூர்யாதேவி தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தரப்பில் தகவல்.
சூர்யாதேவி கைதானபோது நடிகை வனிதா மற்றும் பல காவலர்கள் காவல்நிலையத்தில் உடனிருந்ததாக தகவல்.
*மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம்: தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு.
மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சுப்பிரமணியன் நியமனம்.
*புதுச்சேரியில் சட்டப்பேரவை காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு:
மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த நிலையில் காவலருக்கு தொற்று கண்டறியப் பட்டது. காவலருக்கு தொற்று உறுதியானதால் சட்டப்பேரவை வளாகம் புதன்கிழமை வரை மூடல்.
*தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டம்.
அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள், காவலர்களிடம் கருத்துக் கேட்பு.
கிரேடு-2 காவலர், கிரேடு-2 சிறை வார்டன், உதவி ஆய்வாளர் தேர்வுகளை நடத்த ஆலோசனை.
தலா 50 காவலர்களிடம் கருத்து கேட்டு 31ஆம் தேதிக்குள் பதில் அனுப்புமாறு மாவட்ட எஸ்.பி.களுக்கு உத்தரவு.
*கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா உறுதி.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
No comments:
Post a Comment