இராம் அவ்தேஷ் சிங் Ex.MP சமூகநீதிக்கு போராடிய, மண்டல் குழு பரிந்துரைக்கு-இந்திய அளவில் இதர பிற்பட்ட வகுப்பினர் (OBC)27% இட ஒதுக்கீட்டுக்கு வித்திட்டவரின் மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்.
நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் சமூகநீதிக்கு போராடிய முக்கியத் தலைவரும் மண்டல் குழு பரிந்துரைக்கும் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் இதர பிற்பட்ட வகுப்பினரு(OBC)க்கு 27% பெற்றிட வித்திட்டவருமான இராம் அவ்தேஷ் சிங் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இராம் அங்கேஷ் சிங் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிகவும் நெருக்கமானர். அடிக்கடி தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் அவர் வரும்போதெல்லாம் தைலாபுரம் தோட்டம் மருத்துவர் அய்யா அவர்கள் இல்லத்திற்கு சென்று சந்திப்பார். மருத்துவர் அய்யா அவர்களுடன் நீண்ட நேரம் பேசி உணவருந்திச் செல்வார்.தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சென்னையில் அவரும் நானும் சந்திப்போம். அவர் உடல்நலக் குறைவாக இருக்கும்போது சமீபத்தில் அவரது மகனுடன் உடல் நலம் விசாரித்தேன். அவரால் பேச இயலவில்லை. சமூகநீதியில் அக்கறை கொண்ட அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
No comments:
Post a Comment