அக்னிப்புரட்சி இன்றைய (01.08.2020) முக்கிய செய்திகள்.
*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 57,118 பேருக்கு கொரோனா பாதிப்பு.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,38,870லிருந்து 16,95,988ஆக உயர்வு.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,394லிருந்து 10,95,647ஆக உயர்வு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747லிருந்து 36,511ஆக உயர்வு.
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,074 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,00,877 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 99 பேர் உயிரிழப்பு பலியானோர் எண்ணிக்கை 4,034 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 7,010 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 1,90,966 பேர் குணமடைந்துள்ளனர்.
*தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிக்லாம்.
தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து வித பொருட்களையும் விநியோகிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
*நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வந்திருந்தனர். மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
*ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கோழி ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் லாரியில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும். - அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
*ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் கடைபிடிக்கப்பட உள்ளதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு:
50% இருக்கைகளுடன் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்த நிலையில் முடிவு.
*தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த 11பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிசாமி.
*மின்சாரம் தாக்கி இறந்த 10பேர், பாம்பு கடித்து இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்.
*சான்றிதழ் பதிவேற்றும் பணி தொடக்கம்:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வரும் 10-ம் தேதி வரை https://t.co/FkQ00wGAYc இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றலாம்.
*புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கம் அந்நிய நாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கம்; விருப்ப தேர்வாக இந்திய, அந்நிய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
*சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 7,000லிருந்து 3,000 கனஅடியாக குறைப்பு காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
*தங்கம் விலை இன்றும் உயர்வு:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்வு.
ஒரு சவரன் ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.28 உயர்ந்து ரூ.5178க்கு விற்பனை.
ப்பட்டோர் எண்ணிக்கை 8,078ஆக உயர்வு
*5வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் 2020 நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதத்தில் நடத்த வாய்ப்பு:
TNPL தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
*சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்.
கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு.
*நெல்லை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,387ஆக உயர்வு.
*செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,778ஆக உயர்வு.
*கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் என்ஐஏ நீதிமன்றம் காவல் விதித்ததால் ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் சிறையிலடைப்பு.
*தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு:
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
*சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வெளியீடு:
கோடம்பாக்கம் - 1,606
அண்ணா நகர் - 1,385
தேனாம்பேட்டை - 1,062
வளசரவாக்கம் - 926
ஆலந்தூர் - 541
அடையாறு - 1,149
பெருங்குடி - 504
சோழிங்கநல்லூர் - 454
திருவொற்றியூர் - 400
மணலி - 117
மாதவரம் - 631
தண்டையார்பேட்டை - 587
ராயபுரம் - 812
திருவிக நகர் - 1,050
அம்பத்தூர் - 1,307 பேருக்கு சிகிச்சையில் உள்ளோர்.
*ஆந்திராவில் கிரேன் கவிழ்ந்து விபத்து: ஆந்திரா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிரமாண்ட கிரேன் கவிழ்ந்து கோர விபத்து. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு:
ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு. சரக்கு பெட்டகங்களை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் திடிரென சரிந்து விழுந்தது.....
*சென்னையில் ஆகஸ்ட் 31 வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவிப்பு.
*கேரள தங்க கடத்தல் விவகாரம் - என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை:
டி.ஐ.ஜி. கல்பனா தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்.
5 அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலையில் இருந்து சென்னையில் ரகசிய விசாரணை.
கடத்தல் தங்கம் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கின் விசாரணை - சென்னையிலும் அதிகாரிகள் முகாம்.
*திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு:
இன்று ஒரேநாளில் 325 பேருக்கு புதிய பாதிப்பு. மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 14,161. சிகிச்சை பெறுவோர் - 3,944 வீடு திரும்பியோர் - 9,978 உயிரிழப்பு -240.
*நெல்லை: பழவூரில் போலீசாருக்கு எதிராக மனு தாக்கல் செய்த வழக்கறிஞரை தாக்கியதாக புகார்:
8 போலீசார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு
*கள்ளச்சந்தையில் உயர்தர மருந்துகளை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை:
ஈரோடு, கோவை, மதுரை பகுதிகளில் மருந்துகளை கூடுதலாக விற்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை.
- சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்.
*கடலூர் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் நாளை முதல், வரும் 4ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு.
*கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரின் மனைவி, மருமகன் ஆகியோரும் தொற்றால் பாதிப்பு.
*ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020.
கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல்.
உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது- பிரதமர் மோடி.
*மூத்த அரசியல் தலைவர் அமர்சிங் மரணம்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமர்சிங் இன்று காலமானார். சமாஜ்வாடி கட்சியில் நீண்ட காலம் செயல்பட்டவர் அமர்சிங்.
முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தவர்.
3 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment