வெளிநாட்டில் வாழ்க்கூடிய பா.ம.கவினரில் முக்கியமானவரான குவைத் பா.ம.க முன்னாள் தலைவர் எம்பாவை து. இரவிச்சந்திரன் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி.கே.மணி
வெளிநாடுகளில் வாழவக்கூடியவர்கள் பா.ம.கவில் மிகத் தீவிரமானவர்கள் உள்ளனர். குவைத் பா.ம.க முன்னாள் தலைவர் எம்பாவை து. இரவிச்சந்திரன் இறப்பு மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இறப்பால் மீளாத் துயரிலும் மிகந்த வேதனையிலும் வாடும் குடும்பத்தினர்க்கும் குவைத் பா.ம.க சகோதரர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்தஅனுதாபத்தையும்ஆறுதலையும்தெரிவித்துக்கொள்கிறோம். குவைத் பா.ம.க ஒருங்கிணைப்பாளர் இரமேஷிடம் கைபேசியில் தொடர்புகொண்டு பேசி துக்கம் விசாரித்தேன்.
மறைந்த எம்பாவை இரவிச்சந்திரனுக்கு அறிமுகமானவர்களான குவைத் இராபர்ட், சர்புதீன் ஆகிய இருவரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் தேடி அலைந்து எம்பாவை இரவிச்சந்திரன் உடல் (சடலம்) குவைத் ஃபர்வானியா பெரிய மருத்துவ மனையில் இருப்பதை இரவு 11.15 மணிக்குகு அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
அதோடு அவர் கொரோனா தொற்றில் இறந்ததால் உடலை பார்க்க இயலாது, மருத்துவமனை நிர்வாகமே உடலை கல்லடக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் குவைத்தில் தற்போது 5 நாட்கள் பக்ரீத் விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் இயங்காது என்ற நிலையிலும் உடல் நல்லடக்கம் செய்யும் முன்பே ஃபர்வானியா பெரிய மருத்துவமனை PRO வை அணுகி நாளை அவரது முழு விவரத்துடன் இறப்புச் சான்றிதழ் (DEATH CERTIFICATE) உள்ளிட்ட அவரின் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதற்கான முழு ஆவணங்களையும் எப்படியாவது பெற்று விடுகின்றோம் என்றும் நாளை காலை 9.00 மணிக்கு தொடர்பு கொண்டு பேசலாம் என்றும் உறுதியளித்தனர். இதற்கு உரியவாறு நாளை ஆவன செய்யும்படி வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் உள்ள எம்பாவை து.
இரவிச்சந்திரன் மைத்துனர் செல்வகணபதியிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்தினர்க்கும் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தேன்.
No comments:
Post a Comment