அக்னிப்புரட்சி இன்றைய (04.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.08.2020) முக்கிய செய்திகள்.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம் இன்று ஒரே நாளில் புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,023 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,04,027 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 108 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4,349 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர்.

*கொரோனாவின் 2வது அலையை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை.
- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.

*ராணிப்பேட்டையில் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரம்:

கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு.

ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் அர்ச்சனா கொரோனாவால் உயிரிழந்தார்.

*இலங்கை கடத்தல் மன்னன் மர்ம மரணம் : விசாரணை தொடங்கியது:
கோவையில் இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கோட லொக்கா மரண சம்பவம் - விசாரணை தொடங்கியது.

*மாணவர்கள் கூடுதலாக மொழியைக் கற்க ஆர்வம் - எ.ல் முருகன்:

மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்க ஆர்வமாக உள்ளனர் தமிழக பாஜக தலைவர் எ.ல்முருகன்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் எ.ல்.முருகன் அறிக்கை.

கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை தமிழகத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே இழக்கின்றனர் - எ.ல் முருகன்.

தமிழகத்தில் சிபிஎஸ், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது -  எ.ல்முருகன்.

*வங்ககடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:

வங்ககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்த புதியதாக உருவான காற்றழுத்த பகுதியால்; தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும்.

கேரளா, கர்நாடகாவில் மிக  கனமழையும்; ஆந்திரா தெலுங்கானா, உத்திரப்பிரதேசத்தில் கனமழையும் பெய்யும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

அதிக கனமழை பெய்யும் என்பதால் கோவா, மத்திய பிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்.

*சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வேளியீடு!
செப்டம்பர் 2019ல் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள் வேளியீடு!.

*தங்கம் சவரனுக்கு ரூ 88 அதிகரித்து ரூ 41,664-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ 5,208-க்கு விற்பனை.

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்:

கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் அறிவிப்பு.

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

கோவைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு செல்ல உள்ளது - அமைச்சர் உதயகுமார் தகவல்.

செப்டம்பர் 2019-ல் நடைபெற்ற யூ.பி.எஸ்.சி. சிவில் சர்விசஸ் இறுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு:

829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

*ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்:

கு.க.செல்வம் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக தகவல்.

மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்.

கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்.

திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.

*புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார் - அமைச்சர் செங்கோட்டையன்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

*சென்னையில் சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை.

சிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் வாடகைக்கு இருந்தவரிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல்.

போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை.

போதைப் பொருள் பதுக்கலில் தொடர்பு உடையவர்களை தேடும் பணி தீவிரம்.

*இலங்கை தாதா அங்காடா லக்கா உயிரிழந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு - சிபிசிஐடி ஐஜி சங்கர்.
விசாரணை நடத்த 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் அங்காடா லக்கா தானா என்பது குறித்தும் விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்.

*ஊரடங்கால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு.

ஏழை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் எப்படி விநியோகிப்பது என்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் - நீதிபதி.

சத்துணவு திட்டம் மூலம் மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*இலங்கையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் கூட்டமைப்புக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

*இயந்திரத்தில் கை சிதைந்தவருக்கு ஒரு லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி:

நெல்லையில் குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்த தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு ஒரு லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி.

பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் - முதலமைச்சர் பழனிசாமி.

*தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு.

கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவிப்பு.

சென்னை: புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய காவல்துறை மூலம்  வற்புறுத்திய விவகாரம்:

"சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்".

*மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.

மனைவி கண்முன் காவல் ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்த பெயிண்டர் சீனிவாசன் தீக்குளித்ததாக குற்றச்சாட்டு. நாளிதழ் செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை.

*தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பா.ஜ.க.வில் இணைவதாக வந்த தகவலை அடுத்து முக்கிய ஆலோசனை என தகவல்.

வேலூரில் முறைகேடாக இ பாஸ் வாங்கி கொடுத்தவர் கைது:

இ பாஸ் பெற்று தர ரூ. 2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலம்.

முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேலை தேடுகிறது, போலீஸ்.

*ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு. நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் - தமிழக அரசு.

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியவர் கைது.

கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை.

இதுவரை 50,000 இ-பாஸ்கள் வாங்கியுள்ளதாக ராஜாராம் ஆடியோவில் கூறியிருந்தார்.

*கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 34,713 கன அடி நீர் காவிரியில் திறப்பு.

கபினி அணையில் இருந்து 30,000 கன அடி நீர், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,713 கன அடி நீர் திறப்பு.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages