சுக்கா... மிளகா... சமூகநீதி தொடர்: 2 ஆவது இணையவழி தேர்வை 4518 பேர் எழுதினர், 861 பேர் முழு மதிப்பெண் பெற்றனர்! - தலைமை நிலையம், பாட்டாளி மக்கள் கட்சி,
சமூகநீதி, இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து மக்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் ‘‘ சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ என்ற தலைப்பில் சமூகநீதித் தொடர் ஒன்றை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவரது முகநூலில் எழுதி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் இந்தத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடரில் மொத்தம் 50 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இரு அத்தியாயங்களுக்கு ஒரு தேர்வு வீதம் மொத்தம் 25 தேர்வுகள் இணையவழி தேர்வு முறையில் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி 3 மற்றும் 4 ஆகிய இரு அத்தியாயங்களுக்கான 2 ஆவது தேர்வு 02.08.2020 அன்று நடைபெற்றது. மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வில் மொத்தம் 4518 பேர் இணையவழியாக கலந்து கொண்டனர். தேர்வில் 3007 பேர் 50 விழுக்காட்டிற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மதிப்பெண் பெற்றவர்களின் விவரம் வருமாறு:
50% வரை மதிப்பெண் பெற்றவர்கள் - 1511 பேர்
55 முதல் 60% மதிப்பெண் பெற்றவர்கள் - 138 பேர்
65 முதல் 70% மதிப்பெண் பெற்றவர்கள் - 172 பேர்
75 முதல் 80% மதிப்பெண் பெற்றவர்கள் - 321 பேர்
85 முதல் 90% மதிப்பெண் பெற்றவர்கள் - 752 பேர்
95% மதிப்பெண் பெற்றவர்கள் - 763 பேர்
100 மதிப்பெண் பெற்றவர்கள் - 861 பேர்
தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றிலும் பயிலரங்கம் அமைத்து அரசியல் பாடங்களை கற்பித்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். இப்போது சமூகநீதி குறித்து மக்களிடமும், இளைஞர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சமூகநீதி குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய அரிய தகவல்கள் பொதிந்த கட்டுரைகளை படிக்கச் செய்து, அதனடிப்படையில் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் வழங்கும் புதிய வழக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் இது ஓர் ஆக்கப்பூர்வமான முயற்சி ஆகும். இரண்டாம் தேர்வை 4518 பேர் எழுதியுள்ள நிலையில் இனிவரும் தேர்வுகளை இன்னும் கூடுதலான எண்ணிக்கையிலானவர்கள் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிக்கு,
தலைமை நிலையம்,
பாட்டாளி மக்கள் கட்சி,
தேனாம்பேட்டை, சென்னை 18
No comments:
Post a Comment