அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (05.08.2020) முக்கிய செய்திகள்.

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 857-பேர் உயிரிழந்துள்ளனர்.

உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  19,08,255

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  39,795

5,86,244 -பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,82,216-பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

*தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு!

தமிழகம் - 5175
சென்னை - 1044
மரணம் - 112
குணம் - 6031

* பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சியில் இருந்து இடைநீக்கம் - மு.க.ஸ்டாலின்.

* எஸ்.வி.சேகருக்கு; அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?

5 ஆண்டுகள் அதிமுக எம்.எல்.ஏ.,வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தையும், தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் எஸ்.வி.சேகர் திருப்பி அளிக்க தயாரா.?

அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என சர்ச்சை வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

* கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - மருத்துவமனை நிர்வாகம்.

* ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது.
ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம். - உ.பி.முதல்வர் யோகி ஆத்யநாத்.

* தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5,324க்கு விற்பனை.

* பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை-தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்.

* அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை.

காவல் நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி.

* பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜ்-க்கு கொரோனா.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

* தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

மத்திய அரசு இன்று முதல் அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழக அரசும் அனுமதி.

50 வயதுக்கு குறைவானவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவு.

உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

தமிழக உடற்பயிற்சி கூட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உத்தரவு.

* நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் க்கு கொரோனா பாதிப்பு.
பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில் கருணாஸ்-க்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் வீட்டில் கருணாஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

* ஒகேனக்கல் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஆலம்பாடி, ஊட்டமலை பகுதிகளில் தாழ்வாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் - மாவட்ட நிர்வாகம்!

* நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை தொடர்கிறது! இயல்பு வாழ்க்கை பாதிப்பு! மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மிக கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வரும் 8 ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் தொடர் மழையால் குடியிருப்புகளை இழந்தவர்களைத் தங்கவைப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பு முகாம்கள் அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

* சென்னை மாநகராட்சி சார்பாக....! கொரோனா நுண்கிருமி தொற்றிலிருந்தது பாதுகாப்பா இருக்க என்ன என்ன செய்யனும்னு கொரோனாவே வந்து சொன்னா கேக்காம இருக்க முடியுமா!! கேட்டு, அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகிட்டு, பாதுகாப்பா இருங்க!!

* நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி : உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்.

*கடலூர் 500 ரூபாய்க்கு இ-பாஸ் வழங்கிய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது. ஏற்கனவே ராஜா ராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மணிகண்டனும் கைது.

* புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages