அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டா பிரதமர்.
அனுமன்கரி கோயிலுக்கு 11.40 மணிக்குச் சென்று வழிபட்டார்
ராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்பாக அனுமன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்ததும். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை வரவேற்றார்.
அடிக்கல் நாட்டினார் மோடி.
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம் என்றார்- பிரதமர் மோடி.
நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை.
ராமர் கோயில் போராட்டத்தில் இருந்த உறுதி எவராலும் மறக்க முடியாது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்னாள் பல யுகங்களுக்கு நிலைத்திருக்கும்
தமிழில் கம்பராமாயணம் ராமரின் புகழை பறைசாற்றுகிறது.
அயோத்தியில் ஒலித்த கம்பராமாயணம்!
"காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட வேண்டும் என்று ராமன் சொன்னது போல நாமும் இப்போது விரைந்து செயலாற்ற வேண்டும்" என்று பொருள் படும் வண்ணம் "காலம் தாழ ஈண்டு" என்ற வரி கொண்ட கம்பராமாயண பாடலை கோடிட்டு காட்டி பிரதமர் நரேந்திர மோதி பேச்சு
விழாவில் குறிப்பிட்ட கம்பராமாயணப் பாடல்
ஆண்டையின் அருக்கன் மைந்தன்,
ஐய! கேள் அரிவை நம்பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள்
என்றலும், காலம் தாழ
ஈண்டு இனும் இருத்தி போலாம்
என்றனன் என்றலோடும்
தூண் திரண்டு அனைய தோளான்,
பொருக்கென எழுந்து சொன்னான்
பொருள்:
சூரியன் மைந்தனான சுக்ரீவன் ‘ஐயா பிராட்டி நாம் மீட்டுவரும் நிலையில்தான் உள்ளாள்’ என்று சொல்ல ராமன் ‘அப்போது காலம் தாழ்த்தவா இங்கே இருக்கின்றோம்’ என்றான்.
ராம ராஜ்ஜியத்தில் வேறுபாடுகள் இல்லை, ஏழ்மை இல்லை. அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்குவோம், அது சுயசார்பு பாரதமாக அமையும் - பிரதமர் மோடி.
No comments:
Post a Comment