அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகம் முழுவதும் 1,92,37,886 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 7,16,530 பேர் மரணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 12,346,089 பேர்  மீண்டனர்.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்: இன்று ஒரே நாளில் புதிதாக 5,856 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 984 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,07,109 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 119 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 4,690 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,488 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,27,575 பேர் குணமடைந்துள்ளனர்.

* இலங்கை : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 160 தொகுதிகளில், ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களில் வெற்றி.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி.

* தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவுநாள்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், கட்சித்தலைவர், முதல்வர், என பன்முக வித்தகராகத் திகழ்ந்த கலைஞர் முத்தமிழ் அறிஞராகப் போற்றப்பட்டார்.

50 ஆண்டுகள் கட்சித் தலைவர், 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர், இப்படி பல பொறுப்புகளை வகித்தபோதும் எழுத்துப்பணியை விடவே இல்லை.

அவரது நீண்ட, நெடிய பயணம் இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் நிறைவுபெற்றாலும், தமிழக மக்களால் என்றென்றும் பேசப்படும் தலைவராக விளங்குகிறார் கலைஞர்.

கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை.

துரைமுருகன். டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை.

* கோயம்பேடு வணிக வளாகம் திறக்க வலியுறுத்தி 10ந் தேதி அறிவிக்கப்பட்ட கடையடைப்பு ஒத்திவைப்பு!

* ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் என தீபா தரப்புககு நீதிபதி கேள்வி.

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கு - 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.
சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.

* தங்கம் விலை இன்று  ₹43000.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.46 உயர்ந்து ரூ.5,420க்கு விற்பனை.

ஒரு சவரன் தங்கம் ரூ.368 உயர்ந்து ரூ.43,360-க்கு விற்பனை.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,200 உயர்வு.

* ரத்து செய்யப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு.
வரும் 24ஆம் தேதி முதல் நடைபெறுவதாக அட்டவணை வெளியீடு-மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு.

* கேரளா: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேரை காணவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* நெல்லை மாவட்டத்தில் ரூ.196.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.

தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் திறந்துவைத்தார் முதல்வர்.

* சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு.

அணையின் நீர்மட்டம் 65.55 அடியாகவும், நீர் இருப்பு 28.99 டிஎம்சியாகவும் இருக்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

* தென்னக இரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கபடுவதை கண்டித்து, திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம்:

தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி  முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், வெளி மாநிலத்தவர்கள் முறைகேடாக பணியமர்த்தப்படுவதை கண்டித்தும் போராட்டம்.

* ஊரடங்கு காலத்தில் 'இ-பாஸ்' அனுமதியின்றி திருச்சிக்கு வந்த வெளிமாநிலத்தவர்களை அனுமதித்தது எப்படி என்றும் ஆர்ப்பாட்டம்.

* சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியுமா? சாத்தியக்கூறு உள்ளதா என ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடக் கோரிய வழக்கு

* சென்னை மணலி கிடங்கிலிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை அகற்ற வேண்டும்.

சுங்கத்துறை ஆணையருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.
கிடங்கை சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் வீடுகள் இல்லை என சுங்கத்துறை கூறியிருந்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் 12,000 குடியிருப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

குடியிருப்புகளுக்கு அருகாமையில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதால் உடனடியாக அகற்ற உத்தரவு.

* கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்பு.

10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள போலீசார் தகவல்.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்பு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர் வழங்க விமானப்படைக்கு கோரிக்கை.
15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைப்பு - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா தகவல்.

* அதீத கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூரில் கனமழை பெய்ய வாய்ப்பு. - வானிலை ஆய்வு மையம்.

* இலங்கை தாதா அங்கொடா லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது அம்பலம்.

கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்.

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை.

போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்டு திரிந்ததாக சிபிசிஐடி.

* 1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளன - முதலமைச்சர் பழனிசாமி:

14 நிறுவனங்கள் தங்கள் தொழிலை துவங்கி உள்ளன.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.

95 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளன.
தென்காசியில் 3980 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி.

தென்காசியில் 2107 மகளிருக்கு வாகன ஒதுக்கீடு - 937 பேருக்கு மானியம் - முதலமைச்சர் பழனிசாமி

தென்காசியில் ஆலங்குளம் ஒன்றியத்தில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம். மற்றும் சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் எஞ்சிய திட்டபணிகள் இந்தாண்டுக்குள் நிறைவடையும்.

தென்காசி மாவட்டத்தில்  கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 75% நிறைவு
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் தொழிற்பேட்டை.

தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் கடன் உதவி.

தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி

* மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு.

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு.
நிலச்சரிவை தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் மாயம் என தகவல்.

* 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்- அரசு தேர்வுகள் இயக்ககம்.
www.tnresults.nic.in www.dge1.tn.nic.in  www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்படும்.

* சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.

முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணையை முடித்து ஒரு மாதத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதி கருத்து.

* கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  ரூ. 2 லட்சம் நிவாரணம்-பிரதமர் மோடி அறிவிப்பு.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவு.
தூய்மை இந்தியா குறித்து நாளை நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடு கிறார் பிரதமர் மோடி.

முன்னதாக ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

* கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம்!

சம்பவ இடத்திற்கு உடனே செல்ல பேரிடர் மேலாண்மை குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு!

விபத்து குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் - அமித்ஷா!

கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்...!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages