பிரியாணி கடைக்கு ரூ.10,000 அபராதம்
ஆவடி, விதிமீறிய பிரியாணி கடைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கடைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள பிரியாணி கடையில், 'பார்சல்' வாங்க, கூட்டம் அலைமோதியது.அங்கு, சமூக இடைவெளியை, காற்றில் பறக்க விட்ட பிரியாணி கடை உரிமையாளருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதைபோல், அதே பகுதியில், 'ஏசி' போட்டு இயங்கிய, பிரபல மொபைல் போன் ஷோரூமிற்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, பூட்டு போட்டனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது, நடவடிக்கை தொடரும்' என்றனர்.
No comments:
Post a Comment