அக்னிப்புரட்சி இன்றைய (11.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.08.2020) முக்கிய செய்திகள்.

* உலகளவில் கொரோனா தொற்று:
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.02 கோடியாக அதிகரிப்பு

குணமடைந்தோர் எண்னிக்கை 1.31 கோடியாக உயர்வு

உயிரிழதோர் எண்ணிக்க 7.37 லட்சமாக அதிகரிப்பு

* இந்தியாவில் ஒரே நாளில் 47,746 பேர் கொரோனாவிலிருந்து குணம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22,15,074 லிருந்து 22,68,675 ஆக அதிகரிப்பு.

குணமடைந்தோர் எண்ணிக்கை 15.83 லட்சமாக உயர்வு.

கொரோனா உயிரிழப்பு 44,386 லிருந்து 45,257 ஆக உயர்வு-  மத்திய சுகாதார அமைச்சகம்

* தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

➤  இன்று ஒரே நாளில் 118 பேர் பலி!

➤ தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்!

➤ சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சார்ஜாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த  169 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை வந்த தொழிலாளர்கள் அரசு பேருந்துகள் மூலம் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

* அம்மோனியம் நைட்ரேட்டை 2ஆம் கட்டமாக அப்புறப்படுத்தும் பணி;

சென்னையில் இருந்து 740 டன் அம்மோனியம் நைட்ரேட் 2ஆம் கட்டமாக 12 கண்டெய்னர் லாரிகள் மூலம் ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது.

சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

* கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி.

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வசந்தகுமார் அனுமதி.

* அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடமாடிய மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு:

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மர்ம நபரை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர்  ஒருவர் சுற்றி திரிந்துள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் பாதியில் வெளியேறினார்.

* சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.10 அடியாக உயர்வு.

நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியில் இருந்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

நீர்இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில், பாசனத்துக்காக 10,000 கன அடி நீர் வெளியேற்றம்.

* இலங்கையில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.

200 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள், ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றி, முன்புபோல் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 200 மாணவர்களுக்கு மேற்பட்ட பள்ளிகள், சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினம் என்பதால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் வகுப்புக்கு வரலாம் என்று முடிவெடுத்து செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளி உணவகம் திறக்க அனுமதி இல்லை என்று கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா தெரிவித்தார். கொரோனா காரணமாக இலங்கையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

* வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் ஜவகருக்கு கொரோனா!

இருவருக்கும் தொற்று உறுதியான நிலையில் கிண்டி கிங்ஸ் கொரோனா மையத்தில் அனுமதி!

* புதுச்சேரியில மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு கொரொனா வெருவித் தொற்று உறுதி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்

* வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் "COOK FROM OFFICE" நடைமுறை

அலுவலக பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் விதமாக, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகத்திலேயே நலம் தரும் உணவுகளை சமைத்து அவர்களுக்கு பரிமாறும் "Cook From Office" எனும் திட்டத்தை துவங்கியுள்ள பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

பசி & ருசிக்காக மட்டுமில்லாமல் உடல் நலனையும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை உணவக உரிமையாளர்களும் வரவேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு என் வாழ்த்துகள்.

* உள்ளாட்சித் துறை அமைச்சர் SP வேலுமணி பாராட்டு எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

* மதுரையில் அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை குழுவிற்கு உதவிய சிபிசிஐடி அதிகாரிக்கு கொரோனா.

மதுரை அதிகாரிக்கு கொரோனா தொற்று எதிரொலியாக கோவைக்கு திரும்பிய சிபிசிஐடி அதிகாரிகள்.

அங்கொடா லொக்கா வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் வழக்கு விசாரணை தள்ளிப் போக வாய்ப்பு.

* மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.

12 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 16 பேரை தேடும் பணி தொடர்கிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணியில் தீவிரம்.

* கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை- மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்.

*ஜம்மு-காஷ்மீரில் சோதனை முயற்சியாக ஆக.15க்கு பிறகு 4ஜி இணையதள சேவை வழங்க பரிசீலனை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

* தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்தது:
கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 408 ரூபாய் குறைந்து, ரூ.42,512-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,314 ரூபாயாக உள்ளது.

* தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில் 3,000 கோடி ரூபாயாக ஒதுக்கி நிதி வழங்க கோரிக்கை.

பி.சி.ஆர். சோதனைக்கு ஆகும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

பி.சி.ஆர். சோதனைக்கான செலவை பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒதுக்கவும் கோரிக்கை.

கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது.

* மயிலாடுதுறையில் கொரோனா வெருவிப் பரவல் அதிகரித்து வருகிறது!
அண்மையில் காவல் நிலையத்தில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் மயிலாடுதுறை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வருவாய் நிர்வாக ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வரும்  வியாழன் தொடங்கி ஞாயிறு வரை 4 நாட்களுக்கு தொடர் முழு ஊரடங்கை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பாகம் பிரிக்கப்படாத பரம்பரை சொத்திலும் பெண்ணுக்கு சம உரிமை உண்டு என அதிரடி தீர்ப்பு!

* கேரளா: மூணாறு அருகே ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52ஆக உயர்வு.

* தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்.

சமூகம் பயன் பெற, நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்.

எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு நடிகர் சூர்யா நன்றி.

* குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தகவல்.

மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்ட நிலையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

* முதலமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை:

கொரோனா தடுப்பு - சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கொரோனா பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது - புதிய சூழலும் உருவாகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும். நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

* உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா- புடின் அறிவிப்பு.

கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி இன்று அறிவித்தார்.

மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது: ரஷ்ய அதிபர்.

தனது மகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது: ரஷ்ய அதிபர்.

மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை.

செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிப்பு.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்து ரூ.41,936க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.5,242க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செலுத்தி மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

அக்டோபர் மாதம் தொடக்கத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கேரள தங்க கடத்தல் வழக்கில் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை.

ஓராண்டிற்குள் ரூ. 100 கோடிக்கு மேல் தங்கம் கடத்தியது விசாரணையில் அம்பலம். சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை.

மூன்று பேரிடமும் இன்று முதல் 4 நாட்களுக்கு விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை.

கேரள உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை தீவிரம்.

* முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை தகவல்!

* கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை. சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம்அறிவிப்பு.

மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்த தடை. கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை.

* ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பாக நாளை நிபுணர்கள் குழு ஆலோசனை - மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages