அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2020) முக்கிய செய்திகள்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது:

பாதிப்பு - 23,29,638

குணமடைந்தோர் - 16,39,600

உயிரிழப்பு - 46,091- மத்திய சுகாதாரத்துறை.

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விபரம்: இன்று ஒரே நாளில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 993 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,12,059 அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 119 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 5,278 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,633 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர்.

* பெங்களூரு: எம்எல்ஏ சீனிவாசமூர்த்தி வீடு சூறை- வாகனங்கள் தீக்கிரை- துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.

இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் உறவினர் ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த விவகாரம் வன்முறையாக வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீடு தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது.

இந்த வன்முறைகளைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

* பெங்களூரில் 144 தடை உத்தரவு:
காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் நடந்த கலவரத்தை தொடர்ந்து 144 தடை உத்தரவு.

டிஜே ஹள்ளி மற்றும் கேஜி ஹள்ளி பகுதிகளில் முழு ஊரடங்கு-பெங்களூர் கமிஷ்னர் கமால் பந்த் அறிவிப்பு.

* பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க முதலமைச்சர் உத்தரவு.

24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி கிடைக்கும்.

* ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைந்தது.

சவரனுக்கு ரூ.1832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனை.

1 கிராம் தங்கம் ரூ.229 குறைந்து ரூ.5013க்கு விற்பனை.

* ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

* அரசை நம்பாமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும். கொரோனா ஊரடங்கு மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் பலன் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.

* சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்:
மத்திய தொழிற்பாதுகாப்புப் படை  தகவல்.

இந்தி தெரியாததால் கனிமொழி எம்.பி.யை இந்தியரா? என கேள்வி எழுப்பியதால் சர்ச்சை.
கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

* மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு. கிரானைட் குவாரி உரிமையாளர் பிஆர் பழனிசாமி விடுதலை ரத்து. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு.
பிஆர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து.

* கேரள மாநிலம் இடுக்கி ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.
நிலச்சரிவில் சிக்கிய மேலும் ஒருவரின் உடல் இன்று மீட்பு. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 17 பேரை தேடும் பணி தீவிரம்.

* தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி. பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். - வி.பி.துரைசாமி, தமிழக பாஜக துணைத் தலைவர்.

* எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும்- அமைச்சர் ஜெயக்குமார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிப்பது கட்சியை பலவீனப் படுத்தும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல.
ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும்.

கட்சி, சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம்.
பாஜக தலைமையிலான கூட்டணி என்பது விபி துரைசாமியின் கருத்து.

* குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். - ராணுவ மருத்துவமனை தகவல்.

* தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர் பணியிட மாற்றம்:

தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் பாலகோபாலனுக்கு பணியிடம் ஒதுக்கீடு.

ஐ.பி.எஸ் அதிகாரி அருண் பாலகோபாலன், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி அருண் கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

* முன்னாள் முதல்வர் 'ஜெயலலிதாவின்' இல்லத்தை அரசுடைமையாக்கியது அரசின் கொள்கை முடிவு - தமிழக அரசு.

'ஜெ' இல்லம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* புதுவை முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு:

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர்  ஏழுமலை சுவாச கோளாறு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

* அங்கொடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் கைதானவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.

அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோருக்கு 3 நாள் காவல். சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் தலைமை நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவு.

* குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது-சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்.

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு. சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை; எந்த உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை - திமுக தரப்பு வாதம்.

* நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவன கணக்காளருக்கு முன்ஜாமீன் மறுப்பு.

கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக விஷால் நிறுவன கணக்காளர் ரம்யா மீது வழக்குப்பதிவு.

* எந்த பொதுமேடையிலும் நான் இந்தியில் மொழிபெயர்த்தது இல்லை; அப்படி இருந்தால் நிரூபிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி.

பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்- இந்தி படிக்கவில்லை "இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொன்னது அவமானம்" - திமுக எம்.பி கனிமொழி.

* தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு:

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் -தலைமைச் செயலாளர் சண்முகம்.

இ-பாஸ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை - தலைமைச் செயலாளர் சண்முகம்.

காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

சென்னையைப் போல் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்.

நோய்த் தொற்று அறிகுறி தோன்றுவதற்கு முன்பே நோயாளிகளை கண்டறிய முகாம்கள் உதவும்.

மாநில அளவில் குழுக்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

சென்னையில் பின்பற்றிய நடைமுறைகள் பிற மாவட்டங்களிலும் பின்பற்றப்படும்.

குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படும்.

பரிசோதனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.

24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம்.

முகாம்களில் தரமான உணவு வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும்.

செங்கல்பட்டில் போதுமான வசதிகள் உள்ளன. கொரோனா குறித்து பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்- தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்.

* ஆகஸ்டு 31ம் தேதி வரை புதுச்சேரியில் ஒரு நாள் முழு ஊரடங்கு.

புதுச்சேரியில் அனைத்து செவ்வாய்கிழமையில் முழு ஊரடங்கு.

நாளை மறுநாள் முதல் தினமும் மாலை 7 மணிக்கு கடைகளை அடைத்துவிட வேண்டும்.

முதல்வர் தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages