அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் தமிழ் வழி இந்தியர் கமலா ஹாரிஸ்! போட்டி - Agnipuratchi

அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் தமிழ் வழி இந்தியர் கமலா ஹாரிஸ்! போட்டி

Share This

அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் தமிழ் வழி இந்தியர் கமலா ஹாரிஸ்! போட்டி

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சியாமளா கோபாலன் என்பரின் மகளான கமலா ஹாரிஸ், அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காடு ஊரைச் சேர்ந்த கோபாலன், ராஜம் தம்பதியின் மகளான சியாமளா அமெரிக்கவுக்கு மருத்துவம் படிக்க சென்று, அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை மணந்தார். அவர்களின் மகள் தான் கமலா ஹாரிஸ். (பின்னார் சியாமளா அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டார்).

அம்மாவின் பிள்ளையாக வளர்ந்த கமலா ஹாரிஸ், தான் இந்திய பண்பாட்டில் ஈடுபாட்டுடன் வளர்ந்ததாக கூறுகிறார். தனது அம்மாவின் மகிழ்ச்சியும் கோபமும் எப்போதும் தமிழ் மொழியில் தான் வெளிப்படும் என்று கூறும் அவர், ஆண்டுக்கு ஒரு முறை சென்னைக்கு சென்று உறவினர்களை சந்திப்பது தனது வழக்கம் என்கிறார்.

திருவாரூர் மாவட்டத்தின் பிராமண குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், கடல் கடந்து சென்று, ஆப்பிரிக்கரை மணந்து, அவரது குழந்தை அமெரிக்காவின் துணை ஜனாதிபதிக்கான பிரதான வேட்பாளராக மாறுவது என்பது ஒரு சாதனை. கூடவே, கருப்பின மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் கமலா ஹாரிஸ் முன் நிற்பதும் குறிப்பிடத்தக்கதாகும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages