சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்டு 12. சாதனை படைத்து, மகிழ்வுடன் வாழ கனவு காணுங்கள். எல்லா நிலைகளிலும் வாழ்வில் உயர இனிய வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி   - Agnipuratchi

சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்டு 12. சாதனை படைத்து, மகிழ்வுடன் வாழ கனவு காணுங்கள். எல்லா நிலைகளிலும் வாழ்வில் உயர இனிய வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி  

Share This

சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்டு 12. சாதனை படைத்து, மகிழ்வுடன் வாழ கனவு காணுங்கள். எல்லா நிலைகளிலும் வாழ்வில் உயர இனிய வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி  
     
அன்புத் தம்பி,வணக்கம்.
        
உமது சக்தியால் உம் வாழ்வு ஓங்கி உயரட்டும். உம் வளர்ச்சியால் உமது குடும்பப் பெருமை சிறக்கட்டும். உமது செயல் நாளை பேசட்டும். உம் புகழ் நிலைக்கட்டும். இன்று உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.உமக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.    
நாளை வீடும் நாடும் இளைஞர் கையில். வீட்டுக்கும் நாட்டுக்கும் சொத்து இளைஞரே. இளைஞரின் முன்னேற்றம் கும்பத்தின் உயர்வு. இளைஞரின் வளர்ச்சி நாட்டின் மேம்பாடு.இளைஞர் சக்தி அளவிட முடியாத சக்தி. இளைஞர் திறன் ஈடு இணையற்றது. சமூக ஊடகத்தின் சக்தி இளைஞர்கள்.

இளைஞர் என்பவர் ...
       
இளமைக்கு எடுத்துக்காட்டு.துடிப்பின் ஊற்று, சிங்கநிகர் வீரத்தின் விளை நிலம். திறைமையின் அடையாளம். துணிச்சலின் தோற்றம், விடா முயற்சியின் வெற்றி,சுயநலமற்ற சேவை நோக்கு, தன்னம்பிக்கையின் முனைப்பு, அர்ப்பணிப்பின் பெருமை, மாற்றத்தின் அடிப்படை, முன்னேற்றத்தின் திறவுகோல், சாதனையின் சின்னம், இணைய தளம் இளைஞர் கையில் போன்ற பன்முகத் தன்மை உடையவர் இளைஞர்.                    
         
ஐ.நா.சபையின் பொதுச்சபையின் தீர்மானம் 54 /120 ன்படி உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 12 உலக இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனாவின் சொல்லொணா சோதனை. கொரோனா ஒழியும். சாதனை தொடங்கும். படித்த இளைஞர் வேலையில்லா நிலை மாற வேண்டும். வேலை தேடும் நிலை தீர வேண்டும்.

இளைஞர்கள் அதிகம் கொண்ட கட்சி பா.ம.க என்னும் பெருமைக்குரியது.
இளைஞர்களுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages