அக்னிப்புரட்சி இன்றைய (20.08.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (20.08.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (20.08.2020) முக்கிய செய்திகள்.

* உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,25,56,293.

உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,89,957.

உலகம் முழுவதும் கொரோனாவால் குணம்டைந்தோர் எண்ணிக்கை 1,52,88,834.

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்வு.

சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,175 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,21,450 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் மேலும் 116 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,239 ஆக உயர்வு.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,742 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,01,913 பேர் குணமடைந்துள்ளனர்.

*ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் யோசனை.

மாணவர்களின் வீட்டுப்பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க நீதிபதிகள் அறிவுறுத்தல்.

மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கலாம் எனவும் நீதிபதிகள் யோசனை.

* சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 84.09 ரூபாய்க்கும், விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78.86 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

* கொரோனா தொற்றுக்கு ஆளான தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் உயிரிழப்பு.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்.
இன்று காலை ரகுமான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்.

* கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தமிழக அரசு கவனமுடன் தளர்வுகளை அறிவித்து வருகிறது

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பொருளாதாரத்தில் சிக்கல்.
பொதுமக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது .

மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே இ பாஸ் பெற்று செல்ல வேண்டும்.
கர்ப்பிணி, வயதானோர் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்.

* திருவள்ளூர்: சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசிய கொடியேற்றினார்.

ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினார் அமிர்தம்.

தேசிய கொடியேற்றிய ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்துக்கு மலர்கொத்து கொடுத்து மரியாதை செய்தார் ஆட்சியர்.

* சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.656 குறைந்தது.
ஒரு சவரன் 40,672 ரூபாயாக விற்பனை.
ஒரு கிராம் ரூ.82 குறைந்து ரூ.5084க்கு விற்பனை.

* பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் பதிவேற்ற இன்று கடைசி நாள்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான சான்றிதழ்களை, இன்று நள்ளிரவுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவுறுத்தி உள்ளது.

* ராஜூவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி.

* திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு. ரகுமான்கான் அவர்கள் மறைவையொட்டி, மூன்று நாட்கள் கழக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு திமுக கொடிகளை  அரைக்கம்பங்களில் பறக்க விடுக்கவிடவேண்டும் திமுக.

* வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள்.
மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தல்.

* ஒரே நாடு - ஒரே பணியாளர் முகமை எனும் மத்திய அரசின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம். வேலைவாய்ப்பில் வடநாட்டு இந்திக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சதித்திட்டத்தை அனுமதிக்க முடியாது  - எம்.பி வைகோ

* பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடர ஆணை.

* சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதை ரத்து செய்ய கோரி வழக்கு.

மறுதேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணை.

மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

* பாடும் நிலா... எழுந்து வா - ரஜினிகாந்த் உருக்கம்.

கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம்.
இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை - ரஜினிகாந்த் வேண்டுகோள்.

* ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும். ஒரு டுவிட்டர் பதிவை போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டவர் ஹெச்.ராஜா - அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்றி வருகிறார்கள் - ஹெச்.ராஜாவுக்கு ஜெயக்குமார் பதில்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்ற அறிவுரைகளை பின்பற்றுவோம் - அமைச்சர் ஜெயக்குமார்.

* கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ ஆறுமுகத்திற்கு காெரோனா தொற்று உறுதி.

* இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக தொடர்ந்து 4-வது முறையாக மத்திய பிரதேசத்தின் 'இந்தூர்' நகரம் தேர்வு. தமிழகத்தில் கோவை 40-வது இடம், மதுரை 42-வது இடம், சென்னை 45-வது இடம் பிடித்துள்ளது.

* சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்: கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி என புகழாரம். தோனி ஓய்வு அறிவிப்பால் 130 கோடி இந்தியர்களும் ஏமாற்றம் - பிரதமர் மோடி.

* சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா?
சித்த மருத்துவ துறைக்கு ரூ.437 கோடி மட்டும் நிதி  ஒதுக்கீடு"மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.

ஆயுஷ் என்ற பெயரில் இருந்து சித்தாவை குறிப்பிடும் 'எஸ்' ஐ நீக்கி விடலாமே. குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு.

* சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1008 குறைந்தது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.126 குறைந்து, ரூ.5040க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனை.

* காஞ்சிபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி இருவர் பலி.

முத்தியால்பேட்டை கிராமத்தில் விஷவாயு தாக்கி பலியான லட்சுமணன் மற்றும் சுனில் ஆகியோரின் உடல்கள் மீட்பு.

பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு-வாலாஜாபாத் போலீசார் விசாரணை.

* மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதா?

நாளை காலை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி கோரியும் இல.கணபதி என்பவர் வழக்கு.

விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு.

விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது.

விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம்
தலையிடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

*போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை.

அபராத ரசீதை வாகன உரிமையாளரிடம் கொடுக்காமல் வாகனத்தில் ஒட்டி செல்லும் புதிய நடைமுறை பின்பற்றப்படும்-சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.

* இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயையும் சேயையும் காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வாழ்த்து.

தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையிலும், அரசு மருத்துவர்கள் கர்ப்பிணிக்கு நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்துள்ளனர் - துணை முதலமைச்சர்.

*அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியிடு:

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பிற்கான இறுதியாண்டு தவிர மற்றவர்களுக்கான ஏப்ரல், மே - 2020 பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடு.

பல்கலைக்கழக  இணையதளத்தில் www.coe.annamalaiuniversity.ac.in முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தொலைநிலை படிப்புகளுக்கான (Distance Education) தேர்வு முடிவுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும்- பதிவாளர் இரா.ஞானதேவன்.

* 2 ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல. அது  அவரவர்களின் தனிப்பட்ட கருத்து - முதலமைச்சர் பழனிசாமி.

* பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது-தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியீடு.

வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையும் தொடர்கிறது - மருத்துவமனை அறிக்கை.

* கேரளா : மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு.

நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன மேலும் 3 பேரின் உடல் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது.

* சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages