திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக செயல்பாட்டாளருமான பால்பாஸ்கர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். - மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அதற்காகவே அமைதி அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வந்தார். தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த அவர், வெளிமாநிலங்களில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். கொரோனா பாதிப்பு காலத்தில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வந்தார்.
என் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டிருந்தவர். 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டவர். பால்பாஸ்கர் அவர்களின் மறைவு சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலப் பணிகளுக்கு பெரும் பின்னடைவாகும்.
பால்பாஸ்கர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment