அக்னிப்புரட்சி இன்றைய (23.08.202) முக்கிய செய்திகள்.
*உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,32,72,847 பேர் இதுவரை பாதிப்பு.
உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 8,05,907 பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 56 லட்சம் பேர் பாதிப்பு.
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.79 லட்சத்தை கடந்தது தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,975 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 3,79,385ஆக உயர்வு
சென்னையில் 1,298பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,25,389ஆக உயர்வு
தமிழகத்தில் ஒரேநாளில் 97 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 6,517ஆக உயர்வு
தமிழகத்தில் ஒரே நாளில் 6047பேர் டிஸ்சார்ஜ். இதுவரை 3,19,327பேர் குணமடைந்துள்ளனர் - தமிழக சுகாதாரத்துறை
* சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.84.52 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலையில் எந்த மாற்றமின்றி ரூ.78.86க்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.
* எடப்பாடி பழனிசாமி, சசிகலா, பாஜக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் ஒ.பன்னீர்செல்வத்திடம் 2021 பேரவை தேர்தல் தொடர்பாக பேசப்பட்டு வருவதாக தினமலர் நாளேடு செய்தி வெளியீடு.
நேபாள அரசின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, ஏழு மாவட்டங்களில் சீனா தங்களது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இதை சுட்டிக்காட்டி அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நேபாள அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
* NEET, JEE தேர்வுகளை நீக்கம் செய்ய வேண்டும்.மாணவர் சேர்க்கைக்கு மாற்று வழிகள் குறித்து நடுவண் அரசு சிந்திக்க வேண்டும்
- தில்லி துணை முதல்வர்.
* மசூதி" என்பதற்கு பதிலாக இனி தூய தமிழில் பள்ளிவாசல் என்று அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரிடம் இசுலாமிய அமைப்பினர் கோரிக்கை
* இலங்கையில் அங்கொட லொக்காவின் கூட்டாளி சமியா சுட்டுக்கொலை.
கொழும்பு அருகே கம்பஹா பகுதியில் போலீசார் அதிரடி நடவடிக்கை.
* புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து: இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு நேற்று அறிவித்த நிலையில் நடவடிக்கை.
இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகளுக்கு முரணானது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இ-பாஸ் தேவையில்லை - புதுச்சேரி அரசு.
* டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல்.
தற்கொலை படை தாக்குதல் நடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் அதிக அளவில் பறிமுதல்.
* உத்தர பிரதேச மாநிலம் பலராம்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சிக்கிய வெடிகுண்டுகள்.
டெல்லியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
* சினிமா படப்பிடிப்பு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் வெளியீடு.
படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கையுறை கட்டாயம்.
படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து.
தீ விபத்தில் சிக்கி 3 பேருந்துகள் முழுவதும் சேதமடைந்தன.
தீ விபத்து காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் கரும்புகை கிளம்பியதால் பரபரப்பு.
துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
* பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.
வரும் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி வேலை நிறுத்தம்.
கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்திய நிலையில் புதிய முடிவு.
* திருப்பூர்: உடுமலை அருகே மறையூரில் மலைவாழ் பெண் சந்திரிகா நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை.
பதுங்கியிருந்த வனக்காவலர்களின் இருப்பிடம் பற்றி கூற மறுத்ததால் காளியப்பன் என்பவர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்.
* 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையும். தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு.
* கொரோனா அச்சம் காரணமாக ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
* உலகின் மிக வயதான மனிதர் என அறியப்பட்ட தென்னாப்பிரிக்க நபர், 116-வது வயதில் உயிரிழந்தார்.
தென்னாப்பிரிக்காவின் கேப் மாகாணத்தில் 1904ம் ஆண்டு மே 8ம் தேதி ப்ரெடி ப்ளோம் (Fredie Blom) பிறந்தார் . 1918ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக மொத்த குடும்பமும் உயிரிழக்க, இவர் மட்டும் உயிர் தப்பினார்.
4 மாதங்களுக்கு முன்பு, 116-வது பிறந்த நாளை ப்ளோம் கொண்டாடி இருந்தார். 2 வாரங்களுக்கு முன்புவரை துடிப்பாக இருந்த இவர், 3 நாளுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
112 வயதில் உயிரிழந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் என்பவரையே, உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் அங்கீகரித்துள்ளது. எனவே ப்ளோம் அங்கீகாரமற்ற, உலகின் வயதான நபராக வர்ணிக்கப்பட்டு வந்தார்
* காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியதாக தகவல்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் சோனியா காந்தி பதவி விலகியதாக தகவல்.
* கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள், நிர்வாகிகள் விஸ்வாசமாக இருந்தால்போதும்
எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உருக்கம்
* வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
* யார் மாஸ்க் அணிய வேண்டும்? உலக சுகாதார அமைப்பு விளக்கம்
உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “ 5-வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக்கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது.
அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும். 12-வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* லடாக் Finger-4 பகுதியிலிருந்து இந்தியாவும் சீனாவும் தனது ராணுவத்தை சமமாக பின்வாங்க வேண்டும் என்ற சீன தரப்பு யோசனையை இந்தியா மறுத்தது.
அங்கிருந்து பின்வாங்கினால், இந்திய தரப்பின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடும் என ஏற்க மறுப்பு.
* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது- ரன்தீப் சிங் சுர்ஜேவாலா.
சோனியா காந்தி பதவி விலகியதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா மறுப்பு.
* புதுவையில் மதுபானங்களுக்கான கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.
புதுவையில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை நீட்டிக்க ஆளுநர் கிரண்பேடி அனுமதி.
* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கடந்த 48 மணி நேரமாக சீராக உள்ளது; எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி- மகன் சரண்.
No comments:
Post a Comment