சென்னையில் 50% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல் - Agnipuratchi

சென்னையில் 50% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல்

Share This

சென்னையில் 50% பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல்

சென்னையில் 12 ஆயிரம் நபர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு தானாகவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகியும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டது. இதன்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் மூலம் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் எலிசா பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.

ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல் படி பல்வேறு இணை நோய் உள்ளவர்கள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகதுறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,  சாலையோர வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சி துறை ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவுகள் சென்னை மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டடுள்ளது. இந்த ஆய்வின் முடிவின் படி சோதனை செய்யப்பட்ட 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வை நடத்திய மருத்துவ நிபுணர் கூறியதாவது :

நாங்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. இதை முழுவதையும் ஆய்வு செய்த பின்பு தான் எத்தனை பேருக்கு நோய் உருவாகியுள்ளது என்பதை சரியாக கணிக்க முடியும். ஆய்வு முடிவுகள் சென்னை மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முழுமையாக ஆய்வு செய்து விரைவில் முடிவுகளை வெளியீடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதைப்போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 4 இல் ஒருவருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ள தெரியவந்துள்ளது. குறிப்பாக புனேவில் 50 சதவீதம் பேருக்கும், மும்பையில் 57 சதவீதம் பேருக்கும், ெடல்லில் 23 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages