அக்னிப்புரட்சி இன்றைய (24.08.2020) முக்கிய செய்திகள்.
* உலக அளவில் 2 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.
உலக அளவில் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்வு.
கொரோனா பரவியவர்களில் 66 லட்சத்து 90 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று.
இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 836 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 57,542ஆக உயர்வு.
மொத்த பாதிப்பு 31.06 லட்சமாக உயர்வு.
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,85,352 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,277 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,26,677 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 97 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 6,614 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 3,25,456 பேர் குணமடைந்துள்ளனர்.
* கோவை ஓண்டிபுதூர் பகுதியில் 13 வயது சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் அடித்ததில் காயம்.
சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம்-கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவு.
நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது.
* சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 84.64 ரூபாய்க்கும், விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் டீசல் 78.86 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
* தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்தாகுமா..?
இபாஸ் அனுமதியை தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
* தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு.
* என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள் ஆகும்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்தபின்பு, ரேண்டம் எண் வெளியிடப்படும். அதுகுறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை இன்று தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தஞ்சையில் ஏரியில் மூழ்கிய 6 பேரை காப்பாற்றிய ஸ்ரீதருக்கு 'ஜீவன் ரக்சா' விருது வழங்கி முதலமைச்சர் பழனிசாமி கெளரவிப்பு.
* யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் முதலமைச்சர் நினைவுப்பரிசு வழங்கினார்.
* திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் -கேரள முதல்வர் பினராயி விஜயன்.
* கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பி.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி யனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது.
எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது - மகன் எஸ்.பி.பி.சரண்.
* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
1 சவரன் 40 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனை. 1 கிராம் தங்கம் ரூ.5,003-க்கு விற்பனை.
* கோயம்பேடு சந்தையை திறக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சந்தையை திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
* காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது:
காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்பு.
கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை.
இடைக்கால தலைவராக, சோனியா காந்தி தொடர்ந்து நீடிப்பாரா?
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா?
சோனியா காந்தியே தொடர வேண்டும் எனமூத்த தலைவர்கள் கடிதம்.
ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம்.
கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை.
* மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது.
அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - முதலமைச்சர் பழனிசாமி.
* மேட்டூர் சரபங்கா திட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கினை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி: மதுக்கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது - நீதிபதிகள்.
* மருத்துவ மேற்படிப்பில் தமிழக OBC மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு தொடர்பான அதிமுக வழக்கு: மனு தொடர்பாக மருத்துவ கவுன்சில், மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு!
மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு பணி தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்.
இ-பாஸ் தொடர்பாகவும் தலைமை செயலாளர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.
* பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.
காங்கிரஸ் தலைமை மாற்றம் குறித்து கடிதம் எழுதியவர்கள் மீது ராகுல் காந்தி கடும் காட்டம் என தகவல்.
தலைமை மாற்றம் தொடர்பாக மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் காங். செயற்குழு கூட்டத்தில் புயலை கிளப்பியுள்ளது.
ராகுல் குற்றச்சாட்டிற்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு. பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என கூறுவதா? - ராகுல் காந்திக்கு கபில் சிபல் கண்டனம்.
பாஜகவுக்கு ஆதரவான செயல்பாடு என ராகுல் குற்றம்சாட்டுவதாக கபில் சிபல் சமூகவலைதளத்தில் பதிவு.
பாஜகவுடன் தொடர்பு என்று நிரூபித்துவிட்டால் அரசியலை விட்டு விலகத் தயார்.
கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்றி வருகிறேன்.
30 வருடங்களில் பாஜகவிற்கு சாதகமான எந்த ஒரு கருத்தையும் தெரிவித்தது இல்லை - கபில் சிபல்.
*சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிய வழக்கு. மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், முதல் நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?- மதுரைக்கிளை.
நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
*நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது - ஜே.பி. நட்டா.
* ராகுல் காந்திக்கு எதிரான கருத்தை வாபஸ் பெற்றார் மூத்த தலைவர் கபில் சிபல்.
பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் புகார் கூறியதாக தகவல் வெளியானது.
ராகுல் குற்றச்சாட்டுக்கு கண்டனம்
தெரிவித்து வெளியிட்ட பதிவை நீக்கியுள்ளார் - கபில் சிபல்.
* தேசிய கொடியை அவமதித்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு.
விசாரணைக்கு ஆஜரான சேகரை 28 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம். நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என காவல்துறை உறுதி.
* வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.
பக்தர்களின் வருகையை கண்காணிக்க 18 சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைப்பு- நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவு.
* வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிப்பு.
டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு. கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து நடவடிக்கை.
* காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா?
தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?
ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது - உயர்நீதிமன்றம்.
ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு உயிராக தெரியவில்லையா - உயர்நீதிமன்றம்.
* புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை.
உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நாராயணசாமிக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.
“கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 நாட்கள் முழு ஊரடங்கு" - முதல்வரிடம் பரிந்துரை செய்ய உள்ளதாக அமைச்சர் தகவல்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முழு ஊரடங்கை அமல் படுத்த, முதலமைச்சர் நாராயணசாமியிடம் பரிந்துரை செய்ய உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.
* ஆன் லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிகள் தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது?
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகளை பதிவு செய்து வெளியிட முடியுமா? விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
* நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.39,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5000-க்கு கீழ் குறைந்தது, ஒரு கிராம் தங்கம் ரூ.4,993-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.
* நீட், ஜேஇஇ. 2020 தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.
* தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்.
திமுக ஜனநாயக இயக்கம், வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இயக்கம் - ஸ்டாலின்.
* பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக உள்ளது.
தொடர்ந்து எக்கோ மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை.
* காங்கிரஸ் பொதுச்செயலாளர்
கே.சி. வேணுகோபால் செய்தியாளர் சந்திப்பு: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கம்.
காங்கிரஸ் செயற்குழுவில் 4 முதலமைச்சர்கள் உட்பட 52 பேர் பங்கேற்பு.
கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமை இல்லை.
கட்சியின் உள் விவகாரங்கள் ஊடகங்கள் மூலமாக வெளியில் தெரிவிக்க முடியாது.
கொரோனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே தொடர்வார்.
* ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி. கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுரை.
* கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:
இ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கம்.
கர்நாடகா செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை.
மாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கம்
ரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது. கையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டது.
14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது.
வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கம்.
No comments:
Post a Comment